தவெக கூட்டணியில் சிக்கல்? விஜய்-க்காக காங்கிரஸ், விசிக மீது வைகோ கடும் பாய்ச்சல்!

By Mathi

|

Published on 10 Nov 2026, 4:37 PM

Vaiko-Mdmk-TVK

முதல்வர் விஜய் தலைமையிலான அரசை கூட்டணியில்- அமைச்சரவையில் இருந்து கொண்டே தினமும் 2 கட்சிகள் விமர்சிக்கின்றன என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் மறுமலர்ச்சி திமுகவும் இரண்டு கட்சிதான் இந்த அரசை விமர்சனம் செய்யாத கட்சிகள் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (நவ.10) நடைபெற்ற நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது: பொழுது விடிந்த உடனே கூட்டணியில் இருக்கக்கூடிய இரண்டு கட்சித் தலைவர்கள், ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கக்கூடிய இரண்டு தலைவர்கள், சூரியன் கிழக்கே உதித்தால் போதும், ஜோசப் விஜய் ஆட்சியை அன்னைக்கு அட்டாக் பண்ணாமல் அவங்க காலைச் சாப்பாடு இறங்காது.

ADVERTISEMENT

தினமும் அட்டாக்தான். கூட்டணியில் இருந்துகிட்டு, ஒரு கட்சி மந்திரிசபையிலேயே இருந்துகிட்டு அட்டாக்தான். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் மறுமலர்ச்சி திமுகவும் இரண்டு கட்சிதான் இந்த அரசை விமர்சனம் செய்யாத கட்சிகள். இவ்வாறு வைகோ பேசினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel