டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினை சிக்கலில் மாட்டிவிட்ட செந்தில் பாலாஜி.. குமுறும் திமுக நிர்வாகிகள்!

Published On:

| By Minnambalam Desk

Senthil Balaji Lands Stalin in Trouble... DMK Functionaries Fume

வைஃபை ஆன் செய்ததும், “எல்லாம் என் கையிலதான்.. நிம்மதிக்கு மட்டும் கதி இல்லைதான்”ன்னு பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. டோன் டவுனாகிற மாதிரி இருக்குதே..

நம்ம டோன் எப்பவுமே டான் டான் தான்.. ப்ரோ.. இப்ப விஷயத்துக்கு போவோம் ப்ரோ..

ADVERTISEMENT

போன ஜூன் 23-ந் தேதி நாம பேசுன, ”தவெக எம்.எல்.ஏக்களை தூக்கிய செந்தில் பாலாஜி” விவகாரம்தான் இப்ப தீ பிடிச்சு எரியுது.. இந்த கேஸில 3 பேரை அரெஸ்ட் செஞ்சிருக்கு போலீஸ். செந்தில் பாலாஜிக்கும் அவரோட தம்பி அசோக்குமாருக்கும் தொடர்பிருக்குன்னு போலீஸ் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கு..

இந்த அறிக்கையை அடுத்து பிரஸ் மீட்ல அமைச்சர் நிர்மல்குமார், மு.க.ஸ்டாலினை ரொம்பவே கடுமையாக பேசினார்..

ADVERTISEMENT

இந்த சம்பவங்கள்தான் திமுகவில இப்ப பேசுபொருளா மட்டுமில்ல ‘குமுறலா’ இருக்குதுன்னு சொல்றாங்க.. அப்படி என்ன குமுறல்னு சில மா.செ.க்களை தொடர்பு கொண்டு பேசுனப்ப, “செந்தில் பாலாஜியோட ஒவ்வொரு ஆக்‌ஷனுமே நம்ம பாலிட்டிக்ஸ்ல கான்ட்ரவர்சியாகத்தான் இருக்குது..

அதிமுகவில இருந்தப்ப, டிரான்ஸ்போர்ட் மினிஸ்டரா இருந்தார்.. சிஎம் போஸ்ட்-க்கு கனவு கண்டதா சொல்லிதான் ஜெயலலிதா அவரை ஓரம்கட்டி வெச்சாங்கன்னு சொல்வாங்க.. அப்பவே செந்தில் பாலாஜியின் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட்ல்ல முறைகேடு சொன்னாங்க..

ADVERTISEMENT

2016 எலக்‌ஷன்ல கரூர் பிரசாரத்துல செந்தில் பாலாஜியை ஸ்டாலினும் பயங்கரமா வெளுத்தெடுத்தார்.. அந்த வீடியோக்கள் இப்ப வரைக்கும் பாப்புலர்…

ஜெயலலிதா மறைந்த பின்னாடி எடப்பாடிக்கு எதிராக டிடிவி தினகரன் டீமில் நம்பர் 2-வாக இருந்தார்.. அங்க இருந்து 2018-ல் திமுகவுக்கு வந்தார்..

திமுகவில சேர்ந்த பின்னாடி 2019 இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில மறுபடியும் போட்டியிட்டு ஜெயிச்சு எம்.எல்.ஏ.வானார்.. 2021-ல் கரூர் தொகுதிக்கு மாறி அங்கேயும் ஜெயிச்சாரு.. ஸ்டாலின் கேபினட்டில ரொம்பவே வலுவான மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை மினிஸ்டராகிட்டார்.

செந்தில் பாலாஜி அமைச்சரான பின்னாடிதான் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலா ரூ10 வாங்குற பழக்கமே ஆரம்பிச்சதுன்னு சொல்லலாம்.. அதே மாதிரி தமிழ்நாடு முழுக்க எல்லா டாஸ்மாக் பார்களும் செந்தில் பாலாஜியோட கரூர் கம்பெனி கட்டுப்பாட்டுலதான் இருந்துச்சு. இந்த 10 ரூபாய் விவகாரம் அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் திமுகவை ரொம்பவே டேமேஜாக்கிடுச்சு சார்.. இப்ப எலக்‌ஷன்ல கூட பாட்டிலுக்கு ரூ10 விவகாரம்தானே அதிகமா பேசப்பட்டுச்சு..

செந்தில் பாலாஜி டாஸ்மாக்கை கம்ப்ளீட்டா 5 வருஷம் கண்ட்ரோல் செஞ்சதால உள்ளூர் திமுககாரங்களுக்கு ரொம்பவே அதிருப்தியாகிடுச்சு.. அவங்களால வருமானம் பெருசா பார்க்க முடியலைங்கிற வருத்தம் இருந்துச்சு..

இந்த அதிருப்தியை சரி செய்யுற மாதிரி எலக்‌ஷனுக்கு முன்னாடி கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் டைம்ல கொஞ்சம் பணம் கொடுக்கப்பட்டுச்சு.. அதனால எல்லாம் கட்சிகாரங்க திருப்தி அடையலை..

இதை எல்லாம் எங்களை மாதிரி மா.செ.க்கள்கிட்ட சொல்றாங்க.. நாங்களும் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள்கிட்ட சொன்னாலும், “செந்தில் பாலாஜியை பத்தி நாம எப்படி பேசுறது? அதெல்லாம் மேலிடத்து விவகாரம்பா”ன்னு ஒதுங்கிக்கிறாங்க.. இன்னும் சொன்னா செந்தில் பாலாஜியை பத்தி பேசவே அமைச்சர்கள் எல்லாம் பயந்தாங்கன்னுதான் சொல்லனும்..

அதிமுக ஆட்சிக் காலத்துல செந்தில் பாலாஜி டிரான்ஸ்போர்ட் மினிஸ்டரா இருந்தப்ப நடந்த முறைகேடுக்கு கேஸ் போட்டு பெண்டிங்கில் இருந்துச்சு.. இந்த கேஸில திமுக ஆட்சியில மந்திரியா இருந்தப்ப அமலாக்கத்துறை ஆக்‌ஷன் எடுத்துச்சு.. செந்தில் பாலாஜி ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப ஸ்டாலினின் ஒட்டு மொத்த குடும்பமும் போய் பார்த்தாங்க.. அவரு ஜெயில்ல இருந்து வந்த பிறகு மறுபடியும் அமைச்சரானாரு.. ஆனா உச்சநீதிமன்றம் கறாரா ஆர்டர் போட்டதால அமைச்சர் பதவியில இருந்து விலகிட்டாரு…

இப்ப எலக்‌ஷன் முடிஞ்சப்ப தவெகவுக்கு பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்கலை.. அப்ப செந்தில் பாலாஜிதான் எஸ்பி வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம்னு எல்லார்கிட்டேயும் பேசி, “எடப்பாடியை சிஎம் ஆக்குவோம்.. திமுக ஆதரவு தரட்டும்.. நீங்க கேபினட் அமைச்சர்களாகிடுங்க”ன்னு முயற்சி செஞ்சாரு.. அப்பவே தவெக எம்.எல்.ஏக்கள் சிலர்கிட்டேயும் பேசி 2 பேருக்கு ‘அட்வான்ஸ்’ கூட வைச்சுட்டதா சொல்லிகிட்டு இருந்தார் செந்தில் பாலாஜி.. ஆனா அந்த ஆபரேஷன் பேக் பயராகிடுச்சு..

அதனால செந்தில் பாலாஜி ஓஞ்சு போகலை.. விஜய் அரசு மீது 6 மாசத்துக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாதுதான்.. ஆனா சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்க்க முடியும்னு இன்னொரு ஸ்கெட்ச் போட்டார்.. இந்த ஸ்கெட்ச் விவகாரம்தான் இன்னைக்கு பெருசா வெடிச்சிருக்கு.. தவெக எம்.எல்.ஏக்களுக்கு ரூ35 கோடி பேரம் பேசுனதா பிரச்சனை வெளியே வந்துருக்கு..

செந்தில் பாலாஜியோட ஒவ்வொரு ஆக்‌ஷனுக்கும் ஆபரேஷனுக்கும் உயிரா இருக்கிறதே அவரது தம்பி அசோக்குமார்தான்.. இப்ப தவெக எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசுன கேஸிலேயும் அசோக்குமார் பேருதான் வருது.. அண்ணன் தம்பி ரெண்டு பேருமே அதிகாரத்தை கைப்பற்ற எல்லாமும் செய்வாங்க..

செந்தில்பாலாஜியை தொடக்கத்திலேயே கட்சித் தலைமை ”வைக்க வேண்டிய இடத்துல” வெச்சிருந்தா சிக்கலே வந்திருக்காதுன்னு சொல்லனும் சார்” அப்படிங்கிறாங்க ப்ரோ..

ஆனா செந்தில் பாலாஜி சர்க்கிளில் பேசுனப்ப, “சார்.. அதிகாரத்துல இருக்கிறதுதானே அரசியல்வாதிக்கு முக்கியம்.. பாஜகவை எடுத்துக்குங்க.. எல்லா எக்ஸ்ட்ரீமுக்கும் போய் அதிகாரத்தை டேக் ஓவர் பண்றாங்க.. அந்த மாதிரிதான்… சில ஆபரேஷன்ஸ் பெயிலியர் ஆகும்தான்.. அப்ப பழியும் எங்க மேல வந்துவிழும்தான்.. இதெல்லாம் ‘அரசியல்ல சகஜம்’னு எங்களுக்கு தெரியாதா சார்.. அண்ணனும் தம்பியும் அதிகாரத்துக்காக செய்யற ’சம்பவங்கள்’ ஜெயிச்சிடுச்சுன்னா கட்சிக்கும் நல்லதுதானே”ன்னு நியாயப்படுத்துறாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share