டிஜிட்டல் திண்ணை: பராக்.. பராக்.. புது விஜிலென்ஸ் டைரக்டர்- விஜய் சாய்ஸ் ‘இவங்க’தானா?

Published On:

| By Minnambalam Desk

New Vigilance Director - Who Is Vijay’s Choice?

வைஃபை ஆன் செய்ததும், ”மெல்லமா மெல்லமா காலி… அத சொல்லல சொல்லல”ன்னு குத்து பாடலுடன் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. ‘அரபிக் குத்து’ பாடலுடன்?

சும்மாதாங்க ப்ரோ.. நல்லா வைப் ஆகுதுல்ல.. இப்ப அரசியல் களமும் அந்த மாதிரி வைப் ஆகிடும் போல..

ADVERTISEMENT

அப்படி என்ன ‘செம்ம’ முடிவு எடுக்க போறாராம் சிஎம் விஜய்?

விஜிலென்ஸ் டைரக்டரா இருந்த அருணை 50 நாட்களிலேயே தூக்கியடிச்சுட்டு அந்த பொறுப்பை கூடுதலாக மகேஸ்வரி ஐபிஎஸ் வசம் ஒப்படைச்சாங்க இல்லையா?

இப்ப கவர்மெண்ட் விருப்பப்படி மாஜி திமுக அமைச்சர்களை டார்கெட் பண்ணி விஜிலென்ஸ் ரெய்டு நடந்துகிட்டு.. அடுத்தததாக அன்பில் மகேஷ், மூர்த்தி, சேகர் பாபு பெயர்கள்தான் லிஸ்ட்ல இருக்குதுன்னும் நாம சொல்லி இருந்தோம்..

ADVERTISEMENT

இப்ப விஜிலென்ஸ் முழு நேர டைரக்டரை சிஎம் விஜய் அறிவிக்க போறதா சொல்றாங்க ப்ரோ.. கோட்டை வட்டாரத்துல இதை பத்தி விசாரிச்சப்ப, விஜிலென்ஸ் டைரக்டரா இருந்த அருண் மாற்றப்பட்டதுக்கு அப்புறமா இன்னும் புது இயக்குநர் போடப்படலை..

மதுரை ஹைகோர்ட் பெஞ்ச், அரிசி கடத்தல் கேஸில நேத்து கூட, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முழு நேர இயக்குநரை நியமிக்கனும்; லஞ்ச ஒழிப்புத் துறையை மேம்படுத்த தலைமை செயலாளர் தலைமையில 4 பேர் கொண்ட குழு அமைக்கனும்னு ஆர்டர் போட்டிருக்கு..

ADVERTISEMENT

இந்த நிலைமையில விஜிலென்ஸ் டைரக்டர் போஸ்ட்டுக்கு சிஎம் விஜய் ரெண்டு பேரை பரிசீலனை செஞ்சுகிட்டு இருக்கிறாரு.. ஒருத்தவங்க, வித்யா ஜெயந்த் குல்கர்னி ஐபிஎஸ். தமிழ்நாடு கேடர் அதிகாரியான வித்யா ஜெயந்த், சிபிஐ இணை இயக்குநராக இருந்தாங்க.. தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மே மாசம் 25-ந் தேதியே இவங்களை மத்திய பணியில இருந்து விடுவிச்சு தமிழ்நாடு பணிக்கு அனுப்பி இருக்காங்க..

அதே மாதிரி மத்திய அரசு பணியில இருக்கிற இன்னொரு தமிழ்நாடு கேடர் ஆனந்த் குமார் சோமானி ஐபிஎஸ்.. மதுரை டிஐஜியா இருந்தவர்… 2015-ல் ஜனாதிபதி பதக்கம் வாங்கினவர்.

இந்த ரெண்டு பேரில் ஒருத்தரை விஜிலென்ஸ் புதிய டைரக்டரா நியமிக்கலாம்னுதான் சிஎம் விஜய் ஆலோசனை செஞ்சுகிட்டு இருக்கிறார்.. ”ன்னு சொல்றாங்க ப்ரோ..

இதுக்கு முன்னாடி 2002-2003-ல் திலகவதி ஐபிஎஸ், விஜிலென்ஸ் டைரக்டரா இருந்தாங்க.. அவங்கதான் விஜிலென்ஸ் டிபார்ட்மெண்ட் முழு நேர முதல் பெண் இயக்குநர்.. அடுத்ததாக வித்யா ஜெயந்த்-க்கு சான்ஸ் இருக்குதான்னு சீக்கிரமே தெரிஞ்சுடப் போகுது..

அதோட, புது விஜிலென்ஸ் டைரக்டரை நியமிச்சதுக்கு பிறகு திமுக மாஜிகளுக்கு எதிரான ஆக்‌ஷன்ஸ்தான் ரொம்பவே தீவிரமா இருக்கும்னு கோட்டை வட்டாரங்கள் சொல்லுதுங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share