டிஜிட்டல் திண்ணை: ‘விஜிலென்ஸ்’ அருண் நீக்கம்! 50 நாளில் ‘கெட் அவுட்’ சொன்ன விஜய்.. பின்னணியில் விமலா + தஞ்சை ‘வில்லங்கம்’!

Published On:

| By Minnambalam Desk

Why Vijay Sacked 'Vigilance' Arun in 50 Days- Behind the Controversy

வைஃபை ஆன் செய்ததும், “அதிகாரத்தில் ஆட்டம் – அறத்தின் பிடியில் அல்லோகலம்”.. சாலப் பொருந்தும் கவிதை வரிகள் என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

வாங்க ப்ரோ.. ”அதிகார” மோதல்களை பற்றிய கவிதை எல்லாம் பிரமாதம்..

ADVERTISEMENT

நம்ம கவிதையா என்ன? இப்ப நடக்கிற அப்டேட்ஸ் எல்லாம் அதைத்தான் சொல்லுதே.. விஜிலென்ஸ் டைரக்டரா ஏடிஜிபி அருண் 50 நாட்கள்தான் இருந்தார்.. அதுக்குள்ள அவரை சிஎம் விஜய் தூக்கி அடிச்சுட்டாரே..

ஆமாங்க ப்ரோ.. திரும்பின பக்கம் எல்லாம் விஜிலென்ஸில் இருந்து அருண் ஐபிஎஸ் அதிரடியாக மாற்றப்பட்டதைதான் பேசுறாங்க..

ADVERTISEMENT

யெஸ் ப்ரோ.. அருண் ஐபிஎஸ் விவகாரத்தை பத்தி நாம விசாரிச்சப்ப, ஹைகோர்ட்ல கிடைச்ச செம்ம டோஸ் பத்தி முதல்ல சொல்றாங்க..

அதாவது சென்னை போலீஸ் கமிஷனரா அருண் இருந்தப்ப அவரோட கண்ட்ரோல்ல இருக்கக் கூடிய விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்ட்ரா இருந்த ராஜலட்சுமி மேல விஜிலென்ஸ் ஆக்‌ஷன் எடுத்தது..

ADVERTISEMENT

2017- 2025 கால கட்டத்துல 8 வருஷத்துல ரூ.5.42 கோடி வருமானத்துக்கு அதிகமாக ’இன்ஸ்’ ராஜலட்சுமி சொத்து குவிச்சாங்க என்பதுதான் விஜிலென்ஸ் போட்ட கேஸ். இதுல போன பிப்ரவரி மாசம், ராஜலட்சுமி திருமங்கலம் வெல்கம் காலனி வீட்டுல விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு நடத்தினாங்க… வருமானத்தை விட 372% கூடுதலா ராஜலட்சுமி சொத்து குவிச்சதா வழக்கு பதிவு செய்து விசாரிச்சவர் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா.

சிஎம்மா விஜய் பதவி ஏற்றதும் சென்னை கமிஷனரா இருந்த அருண், விஜிலென்ஸ் டைரக்டரா டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.

அருண் விஜிலென்ஸ்-க்கு வந்ததும் 2 வாரத்திலேயே, ராஜலட்சுமி கேஸை விசாரிச்ச இன்ஸ்பெக்டர் விமலா, வருவாய்த் துறை அதிகாரிகிட்ட லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆனா இன்ஸ்பெக்டர் விமலா, கோர்ட்டுக்கு போயிட்டாங்க.. விமலா கேஸை விசாரிச்ச உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, “லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின்படி செயல்பட்ட விமலாவை விஜிலென்ஸ் டைரக்டர் அருண் சஸ்பெண்ட் செஞ்சது உள்நோக்கம் கொண்டது”ன்னு காட்டமாக விமர்சிதார்… அதோட இன்ஸ்பெக்டர் விமலாவின் சஸ்பெண்ட் ஆர்டருக்கும் தடை விதித்தாங்க ஹைகோர்ட் நீதிபதி பிடி ஆஷா.

இந்த உத்தரவுக்கு எதிராக அருண் ஐபிஎஸ் தரப்புல- அதாவது விஜிலென்ஸ் தரப்பில உயர்நீதிமன்றத்தில அப்பீல் செஞ்சாங்க.. இந்த அப்பீலை ஹைகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் பெஞ்ச் விசாரிச்சு, தனி நீதிபதி பிடி ஆஷாவோட தடை உத்தரவை நிறுத்தி வைச்சாங்க..

விஜிலென்ஸ் டைரக்டரா அருண் பதவியேற்ற உடனே, பழிவாங்கும் நடவடிக்கையா இன்ஸ்பெக்டர் விமலா மீது ஆக்‌ஷன் எடுத்தது; கோர்ட்டில் குட்டு வாங்கியதுன்னு அத்தனையையும் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க், சிஎம் விஜய்க்கு டீட்டெய்ல்லா ரிப்போர்ட்டா அனுப்பி இருந்தாரு.. இதை பார்த்த சிஎம் விஜய் ரொம்பவே அப்செட் ஆகிட்டாரு..

இன்னொரு சம்பவம் தஞ்சாவூரில் நடந்தது.. தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்தவர் ஜோதிலட்சுமி.. ஜூலை 2-ந் தேதி, தஞ்சை அம்மாபேட்டை தீபாம்பாள்புரம் வள்ளியம்மைநாதர் கோவில் புதுப்பிக்கும் பணிக்காக காண்ட்ராக்டரிடம் ரூ1 லட்சம் லஞ்சம் வாங்குனதா ஜோதிலட்சுமியும் அவரது பிரண்ட் கிரிஜாவும் விஜிலென்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டாங்க..

ஆனா, இங்கேயும் ”ஜோதிலட்சுமியை திட்டம் போட்டே ‘சிலர்’ சிக்க வெச்சிருக்காங்க.. அவரோட பதவி காலத்துல 28 கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துனாங்க..”ன்னு சிஎம் விஜய்-க்கு கம்ப்ளெயிண்ட் ஆகியிருச்சு.

அதோட, கைது செய்யப்பட்ட ஜோதிலட்சுமி, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய மாஜி அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் உறவினர்னும் சொல்றாங்க.. இந்த தகவலும் சிஎம் விஜய்க்கு போயிருக்கு..

ஏற்கனவே சென்னை இன்ஸ்பெக்டர் விமலா கேஸ், இப்ப தஞ்சாவூர் ஜேசி ஜோதிலட்சுமி கேஸ்னு விஜிலென்ஸ் டைரக்டர் அருண் ஐபிஎஸ், தொடர்ந்து அதிகாரத்தை பழிவாங்கலுக்கு பயன்படுத்துறாரே அப்படிங்கிற கோபம் சிஎம் விஜய்க்கு.. அதனாலதான் 50 நாளிலேயே அருண் ஐபிஎஸ்ஸை விஜிலென்ஸ் டைரக்டர் போஸ்ட்டில் இருந்து தூக்கிட்டு அவரை போலீஸ் அகாடமி அதாவது காவலர் பயிற்சி பள்ளிக்கு மாற்ற உத்தரவிட்டாராம் சிஎம்.. இதுதான் பின்னணின்னு சொல்றாங்க ப்ரோ..

இதை பத்தி அருண் ஐபிஎஸ்-க்கு நெருக்கமான சர்க்கிளில் விசாரிச்சப்ப, “சென்னை கமிஷனரா இருந்தப்பவும் அவர் மேல புகார் சொன்னாங்க.. இப்ப விஜிலென்ஸ் டைரக்டரானப்பவும் புகார் சொன்னாங்க..

விஜிலென்ஸ் டைரக்டரா அருண் பொறுப்பேற்ற 45 நாட்களிலேயே மொத்தம் 52 ”லஞ்ச” கேஸ்கள் பதிவு செய்யப்பட்டிருக்கு.. லஞ்சம் வாங்கி குவிச்ச முக்கியமான 4 இடங்களில் அதிரடியா விஜிலென்ஸ் ஆபீசர்ஸ் சோதனை நடத்துனாங்க.. லஞ்ச பணம் ரூ.2.5 கோடியை அருண் ஐபிஎஸ்-ன் 45 நாள் பீரியட்ல கைப்பற்றினாங்க.. இதுமட்டும் இல்லாம விஜிலென்ஸ் டிபார்ட்மெண்ட்டிலும் புகாருக்கு உள்ளான 2 டிஎஸ்பிக்கள், 7 இன்ஸ்பெக்டர்களையும் டிரான்ஸ்பர் செஞ்சாரு.. லஞ்சம் வாங்கித் தர்றதுக்குன்னே புரோக்கரா செயல்பட்ட போலீசாரை எல்லாம் அவங்க அவங்க டிபார்ட்மெண்ட்டுக்கு திருப்பி அனுப்பினாரு அருண் ஐபிஎஸ்.. இதுக்கு எல்லாம் கிடைச்ச சன்மானம்தான் 50 நாளிலேயே டிரான்ஸ்பர்..

இன்னொரு விஷயமும் இதில் இருக்கு.. 2024-ல் சென்னை போலீஸ் கமிஷனரா அருண் இருந்தப்ப கூடுதல் காவல் ஆணையராக இருந்த அஸ்ரா கார்க் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.. இப்ப உளவுத்துறை ஐஜியா அஸ்ரா கார்க் இருக்கிறார்”ன்னும் சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share