டிஜிட்டல் திண்ணை: ஆட்சி கவிழ்ப்பு ‘ஆபரேஷன்’ விஸ்வரூபம்.. விஜய்யை அதிர வைத்த ‘பகீர்’ ரிப்போர்ட்.. தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின் பின்னணி என்ன?

By Mathi

|

Published on 11 Nov 2026, 2:36 PM

Digital Thinnai TVK DMK AIADMK -New

வைஃபை ஆன் செய்ததும், “நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. பாட்டு இது?

அதுசரிங்க ப்ரோ.. இந்த மாதிரி பாட்டுகளும் அதனோட அர்த்தங்களும் நாம எல்லாம் தெரிஞ்சுக்கிறதுதான் நல்லதுதான் ப்ரோ.. ஏன்னா இப்ப நடக்கிற சிச்சுவேசன்ஸ்-க்கு எல்லாம் செம்மையா செட் ஆகுதுங்க ப்ரோ..

ADVERTISEMENT

மாமல்லபுரத்துல இன்னைக்கு தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை சிஎம் விஜய் கூட்டியிருக்கிறார் இல்லையா? இந்த மீட்டிங்கை கூப்பிட்டதே, “எம்.எல்.ஏ.க்களை கண்டிக்கத்தான்.. குறிப்பா கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், துணை சபாநாயகர் ரவி சங்கர் மாட்டியிருக்கும் பஞ்சாயத்துகளை முன்வெச்சுதான் எம்.எல்.ஏக்களுக்கு ‘ரெய்டு’ இருக்கு”ன்னு எல்லாருமே பேசிகிட்டு இருக்காங்க.. ஆனால்..

அப்ப.. வேற என்ன காரணமாம் ப்ரோ.

இந்த தவெக எம்.எல்.ஏ.க்கள் மீட்டிங்குக்கு பின்னாடி இருக்கிறதோ ரொம்பவே மிகப் பெரிய பிரளயமாம் ப்ரோ… இதை பத்தி சிஎம் விஜய்க்கு நெருக்கமான சர்க்கிளில் விசாரிச்சப்ப, “இன்னைக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை சிஎம் கூப்பிட்டதே ரொம்ப முக்கியமான விஷயத்துக்குதான்.. எலக்‌ஷன் ரிசல்ட் வந்தப்பவே திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செஞ்சாங்க.. அப்புறமா திருமாவளவனை சிஎம்-ன்னு நிறுத்தி டிரை பண்ணினாங்க.. ஆனா அது எதுவும் ஒர்க் அவுட் ஆகலை..

ADVERTISEMENT

சிஎம்மா விஜய் பதவியேற்ற பின்னரும் கூட திமுக -அதிமுகவோட இந்த ஆபரேஷன் நிக்கலை.. ஏற்கனவே 13 தவெக எம்.எல்.ஏக்கள்கிட்ட திமுக -அதிமுக தரப்பு பேசியிருக்கிறதா சிஎம் விஜய்க்கு இன்டெலிஜென்ஸ் ஐஜி அஸ்ரா கார்க் ரிப்போர்ட் கொடுத்திருந்தார்.. இதுக்கு பிறகு அந்த 13 எம்.எல்.ஏ.க்களையும் புஸ்ஸி ஆனந்த் மூலமாக சமாதானப்படுத்தினார் சிஎம் விஜய்.. அவர்களில் சில பேர்கிட்ட சிஎம்மே பேசவும் செஞ்சார்..

இந்த நிலைமையில சிஎம் விஜய்க்கு இப்ப புது ரிப்போர்ட் ஒன்னு வந்துருக்கு. அதுல, “திமுக- அதிமுக- பாஜக இணைஞ்சு ஆட்சியை கவிழ்க்க ஸ்கெட்ச் போட்டிருக்காங்க.. இதனால தவெக எம்.எல்.ஏ.க்கள் பலரிடமும் தொடர்ந்து பேசிகிட்டு இருக்காங்க.. ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர்றப்ப தவெக எம்.எல்.ஏ.க்கள் பலரையும் வேறு ஒரு மாநிலத்துக்கு கொண்டு போய் தங்க வைக்கிற அதாவது ’பாஜக- அமித்ஷா பார்முலாவை’ ஆபரேட் பண்ண போறாங்க..

ADVERTISEMENT

இந்த ஆபரேஷனைப் பொறுத்தவரைக்கும் திமுக- அதிமுக தரப்பு சிஎம் வேட்பாளராக திருமாவளவனைப் போல தலித் ஒருத்தரை நிறுத்த திட்டமிட்டிருக்காங்க.. அத்துடன் அமைச்சர்களாக இல்லாத காங்கிரஸின் 3 எம்.எல்.ஏ.க்களுமே கூட அணி மாறுவாங்க”ன்னு சொல்லப்பட்டிருந்தது.

இந்த ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிஎம் விஜய் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டவங்களோடு டிஸ்கஷன் செஞ்சாரு.. இதன் அடுத்த கட்டமாகத்தான் இப்ப எம்.எல்.ஏ.க்களை கூப்பிட்டிருக்கிறார்..

இந்த எம்.எல்.ஏ.க்கள் மீட்டிங்குக்கு வரும் போது ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் இந்த 6 மாசத்துல தொகுதியில என்ன என்ன செஞ்சிருக்கீங்கன்னு ரிப்போர்ட் ஒன்னு கொண்டு வாங்கன்னும் சொல்லி இருக்கிறார் சிஎம் விஜய்.

இந்த மீட்டிங்குல அதிருப்தியில இருக்கிறதா இன்டெலிஜென்ஸ் ரிப்போர்ட்ல இருக்கிற எம்.எல்.ஏ.க்கள் கிட்ட பேசி அவங்களை சமாதானப்படுத்துவார் சிஎம் விஜய்.. அவங்களை எல்லாம் ரிசார்ட்லேயே 3 நாட்கள் தங்க வைக்கவும் ஏற்பாடு செஞ்சிருக்காங்க..

அதோட, எம்.எல்.ஏக்கள் கூட்டத்துல எல்லாரையும் ரொம்ப டச் பண்ற மாதிரி ஒரு எமோஷனல் ஸ்பீச்சை சிஎம் விஜய் கொடுக்கவும் சான்ஸ் இருக்குதுன்னு”ன்னு சொல்றாங்க ப்ரோ.

அடேங்கப்பா.. பயங்கரமான ஆபரேஷன்தான்… ஓகே ப்ரோ.. சிஎம் விஜய் சைடில் இருந்து கவுண்ட்டர் ஏதும் இருக்கா?

ஆமாங்க ப்ரோ.. தவெக எம்.எல்.ஏ.க்களை திமுக- அதிமுக டார்கெட் பண்ணி வளைக்கிறதுக்கு பதிலடி கொடுக்கிற மாதிரி திமுகவில் இருந்து சில எம்.எல்.ஏ.க்களையாவது தூக்கிடனும்னு சிஎம் விஜய் சைடில இருந்தும் ஒரு ஆபரேஷனை ஸ்டார்ட் பண்ணியிருக்காங்களாம் ப்ரோ.. இப்படி ஆபரேஷனுக்கு பதில் ஆபரேஷன் ‘சம்பவங்களால’ இனிவரப்போற நாட்களில் தமிழக அரசியல் களம் ரொம்பவே தகிக்க போகுதுங்க ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel