வைஃபை ஆன் செய்ததும், “என்னை விட்டு செல்லாதே! செல்லாதே..”ன்னு பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. எதுக்கு இப்ப இந்த பாட்டு?
டெல்லியில பார்லிமெண்ட் பக்கம் இந்த பாட்டைத்தான் சில தமிழக எம்.பி.க்கள் ஹம்மிங் பண்றாங்க ப்ரோ..
ஆஹா.. ஏதோ பெரிய விவகாரம் போல.. ம்.. சொல்லுங்க ப்ரோ.. சொல்லுங்க
நீட் எதிர்ப்பு போராட்டத்தால டெல்லி ஒரு பக்கம் தகிச்சுக்கிட்டு இருக்கு.. இன்னொரு சைட் ஜூலை 20-ந் தேதி தொடங்குன பார்லிமெண்ட் கூட்டம் எதிர்க்கட்சிகளோட போராட்டங்களால முடங்கியிருக்கு..
திங்கள்கிழமை 2-வது வார பார்லிமெண்ட் கூட்டம் ஆரம்பிச்சாலும் அடுத்து என்ன பிரச்சனையை கிளப்புவாங்கன்னு முழி பிதுங்கிகிட்டு நிக்குது பாஜக..
அதே நேரத்துல பார்லிமெண்ட்ல, ‘நேற்று பார்த்த காட்சிகள் இன்று இல்லை.. நாளை என்ன காட்சிகளோ’ன்னு கமுக்கமாக திமுக, காங்கிரஸ், பாஜக எம்.பிக்கள் சிரிச்சுகிட்டே ஒருத்தரை ஒருத்தர் கிராஸ் செய்யுற காட்சிகளையும் பார்க்க முடியுது..
ஆஹா.. என்னதான் நடக்குதுன்னு நம்ம தமிழக எம்.பி.க்கள்கிட்ட விசாரிச்சதுல, “திமுக உறவை காங்கிரஸ் முறிச்ச உடனேயே, லோக்சபா சபாநாயகருக்கு கனிமொழி ஒரு லெட்டர் அனுப்பினாங்க.. ”நாடாளுமன்றத்துல, இதுவரைக்கும் இந்தியா கூட்டணி எம்.பிக்களோட உட்கார்ந்திருந்தோம்.. எங்களுக்கு இனி தனி பகுதியை ஒதுக்கி கொடுங்க”ன்னு அதுல சொல்லி இருந்தாங்க..
இன்னும் இந்த இட ஒதுக்கீடு முடியலை.. முன்னாடி காங்கிரஸ் பக்கத்துல திமுக உட்கார்ந்திருச்சு.. இப்ப திமுக அங்கிட்டு நகரும் போது சமாஜ்வாதியை தங்களுக்கு பக்கத்துல உட்கார வைக்க காங்கிரஸ் கேட்டிருக்கு..
இதெல்லாம் இருந்தாலும் சுவாரசியமான சம்பவங்களும் நடந்துகிட்டுதான் இருக்கு..
திமுக கனிமொழி- காங்கிரஸ் ஜோதிமணியும் குதூகலமா சிரிக்கிற போட்டோ சோசியல் மீடியாச்சு வைரலாச்சு இல்லையா?
இங்கே நடக்கிற உண்மை என்னானா ஜோதிமணி மட்டுமில்லை.. பல காங்கிரஸ் எம்.பி.க்களும் திமுக எம்.பிக்கள்கிட்ட ‘பழைய’ பாசத்தோடுதான் பேசுறாங்க.. அப்ப பேசும் போது, “நாங்க எல்லாம் திமுகவால் ஜெயிச்சவங்கதான்.. எங்க தலைமைதான் இப்படி ஒரு முடிவை எடுத்துருச்சு.. திமுக உறவை ஹைகமாண்ட் முறிச்சதுல எங்களுக்கு எல்லாம் ரொம்பவே வருத்தம்தான்”ன்னு ஓபனாகவே சொல்றாங்க..
அதோட பார்லிமெண்ட்டுக்கு உள்ளே இதைவிட இன்னொரு அதிமுக்கியமான சம்பவமும் நடந்துச்சு.. கனிமொழி- ஆ.ராசாகிட்ட திடீர்னு ராகுல் காந்தி சீரியசா பேச ஆரம்பிச்சார்.
இதை பார்த்த திமுக எம்.பிக்கள், “என்னப்பா இது புதுசா இருக்கே…”ன்னு பக்கத்துல போய் நின்னாங்க.. அப்ப, “இந்தியா கூட்டணி கூட்டத்துல ஏன் நீங்க (திமுக) கலந்துக்கிறது இல்லை? இந்தியா கூட்டணி கூட்டத்துல வந்து கலந்துக்குங்க.. பொலிட்டிக்கல் சிச்சுவேன் அப்படியே இருக்காது இல்லையா? மாறிகிட்டுதானே இருக்கும்”னு சொன்னார் ராகுல் காந்தி.. கனிமொழி எந்த பதிலும் சொல்லலை..
ஆனாலும் திமுகவின் டிஆர் பாலு எம்.பி மட்டும்தான் எந்த காங்கிரஸ் கட்சி எம்.பியையும் நேருக்கு நேரா பார்க்கிறதே இல்லை.. அவங்க எதிரில் வந்தாலும் கூட முறைக்கிற பார்வைதான் டிஆர்பிகிட்டு இருந்து வருது.. கடந்த காலங்களில்ல, பாஜக அமைச்சர்கள், எம்.பி.க்களை இப்படித்தான் திமுகவினர் பார்த்தாங்க..
பாஜகவினரும் கூட, “எப்ப பார்த்தாலும் திமுகதான் குரல் கொடுக்குது.. குடைச்சல் கொடுக்குது.. போராட்டங்களை ரொம்பவே துடிப்போடு லீட் செய்யுது”ன்னு செம்ம காண்டுல இருந்தாங்க..
இப்ப திமுகவை பாஜக பார்க்கிற பார்வையே வேற மாதிரி இருக்கு.. திமுக எம்.பி.க்கள்கிட்ட ரொம்பவே சுமூகமாக, கேசுவலா பேசுறாங்க பாஜக எம்.பி.க்கள்.. அப்படி பேசும் போது ஒரு விஷயத்தையும் போகிற போக்கில போட்டுவிட்டு போறதுதான் இப்ப பார்லிமெண்ட்ல ஹாட் டாபிக்கா எம்.பி.க்கள்கிட்ட ஓடுது…
திமுக எம்.பிக்கள்கிட்ட பேசுற பாஜக எம்.பிக்கள், “எப்படி இருக்கீங்க? உங்க லீடர் (மு.க.ஸ்டாலின்) எப்படி இருக்கிறாரு”ன்னு நலம் விசாரிச்சுட்டு, “என்.டி.ஏ. கூட்டணிக்கு நீங்களும் வர்றீங்க போல.. எல்லா பேச்சுவார்த்தையும் முடிஞ்சிருச்சு.. திமுகவும் நம்ம கேபினட்ல சேரப் போறாங்க; டீ லிமிட்டேஷன் பில்லை கூட திமுக ஆதரிக்கப் போகுது”ன்னு அமித்ஷாஜி மூலமா எங்களுக்கு தகவல் வந்திருக்கு”ன்னு சொல்றாங்க..
என்னடா இதுன்னு ஜெர்க் ஆகுற திமுக எம்.பிக்கள், “அப்படி எதுவும் இல்லையே..இப்ப கூட நாங்க உங்களுக்கு எதிராத்தானே போராடிகிட்டு இருக்கிறோம்.. ஜந்தர் மந்தரில சோனம் வாங்சுக்கை முதல்ல ஆ.ராசா போய் பார்த்து ஆதரவு தெரிவிச்சாரு..அப்புறமா கனிமொழி தலைமையில எம்.பி.க்கள் எல்லாம் போய் நீட் போராட்டத்துக்கு சப்போர்ட் தெரிவிச்சோமே.. எங்க தலைமையில இருந்து நீங்க சொல்ற மாதிரி எந்த தகவலும் எங்களுக்கு வரலையே”ன்னு ரிப்ளை பண்றாங்க..
அதாவது அங்கிட்டு காங்கிரஸ், திமுகவை மறுபடியும் இந்தியா கூட்டணிக்குள்ள கொண்டுவர விரும்புது.. இங்கிட்டு பாஜக, திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ள கொண்டு வந்தாச்சுன்னு சொல்லுது”ன்னு சொல்றாங்க ப்ரோ..
காலம் மாற காட்சிகளும் மாறுதுங்களோ ப்ரோ? ஆமா.. திடீர்னு ஆளுநர் டெல்லிக்கு கிளம்பிட்டாரே? ஏதும் விஷேமாங்க ப்ரோ?
ம்.. இன்னைக்கு மதியம்தான் ஆளுநர் அர்லேகர் டெல்லிக்கு புறப்பட்டாரு.. டெல்லி சோர்ஸ்ல நாம விசாரிச்சப்ப, “தமிழ்நாடு விஷயமாத்தான் அமித்ஷாவை பார்க்க அர்லேகர் வந்திருக்கிறாரு.. புதுசா வந்திருக்கிற விஜய் கவர்மெண்ட்டை பத்தி சில விஷயங்களை அர்லேகர்கிட்ட டிஸ்கஷன் செய்ய இருக்கிறார் அமித்ஷா..
திமுகவோட மாஜி அமைச்சர்கள் கே.என்.நேரு. எ.வ.வேலு உள்ளிட்டவங்க மேல விஜய் கவர்மெண்ட் விஜிலென்ஸ் கேஸ் போட்டிருக்காங்க இல்லையா.. இன்னும் பல மாஜி மந்திரிகள் மேலேயும் கேஸ் போட போறாதா இருக்கிறாங்களாம்..
முன்னாள் அமைச்சர்கள் மேல வழக்கு பதிவு செய்ய ஆளுநர்தான் பெர்மிஷன் கொடுக்கனும்.. ஆனா இப்ப அப்படி பெர்மிஷன் வாங்கலையாம்.. இந்த பெர்மிஷன் கொடுக்கிறது தொடர்பாகவும் ஆளுநர் அர்லேகரிடம் அமித்ஷா பேசக் கூடும்”ன்னும் சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
