நீட் எதிர்ப்பு போராட்டம்: 47 அதிகாரிகள் கூண்டோடு நீக்கம்- தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து இன்று முடிவு?

Published On:

| By Mathi

Delhi NEET Protest: NTA Scaked 47 Officials

டெல்லியில் நீட் தேர்வு (Neet) முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் பொதுநுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகாமை (NTA) அதிகாரிகள் 47 பேர் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லியில் நடைபெறும் நீட் எதிர்ப்பு போராட்ட செய்தித் தொகுப்பு:

ADVERTISEMENT
  • டெல்லியில் இன்று 18 மெட்ரோ ரயில் நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், படேல் சவுக், பாலகிருஷ்ணா ஆசிரமம் மார்க், பாரகம்பா ரோடு, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த்த், ஜன்பத், மண்டி ஹவுஸ், ஐ.டி.ஓ, டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக், சிவாஜி ஸ்டேடியம், ஜண்டேவாலன் மற்றும் டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
  • டெல்லி மதுபான கடைகளை இரவு 8 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக டெல்லியில் மது பான கடைகள் இரவு 10 மணிக்கு மூடப்படும்.
  • மத்திய அரசுடன் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்பதாக காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தெரிவித்துள்ளது.
  • மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா தொடர்பாக மத்திய அரசு இன்று முடிவை அறிவிக்க உள்ளது.
  • போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு உணவு விநியோகத்தை தடை செய்துவிட்டதாக பரவிய செய்திகளில் உண்மை இல்லை என டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
  • ஆனால் போராட்டகாரர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வரும் தன்னார்வலர் முகம்மது ஜூனைத் மீது உத்தரப்பிரதேச காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பதாக காக்ரோச் ஜனதா கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
  • மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
  • நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகாமை NTA-ன் அதிகாரிகள் 47 பேர் கூண்டோடு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share