முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்த போது அமைச்சர் பர்வேஸ் (Minister Parvez), கேமராக்கள் புடை சூழ குலுங்கி குலுங்கி கண்ணீர் விட்ட வீடியோ பதிவுகள் பேசுபொருளாகியது.
இது தொடர்பாக புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸ் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த விளக்கம்: 2006-ல இருந்து நான் விஜய்யுடன் இருக்கிறேன். 11 வயதில் இருந்து விஜய்யுடன் இருக்கிறோம். நான் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பின்னர் இந்த கட்சிக்கு வரவில்லை.. ரசிகர் மன்றமாக இருந்தோம்.. பின்னர் மக்கள் இயக்கமாக மாறினோம்.. அப்போது முதலே நான் பயணிக்கிறேன். அவரது படத்தை வைத்து கவுன்சிலர் ஆனவன்.. அவர் படத்துடன் மன்ற கூட்டங்களில் பங்கேற்றவன்.
இப்பதான் எம்.எல்.ஏ., அமைச்சர் ஆகி இருக்கிறோம். இப்படி விஜய் கூட இத்தனை ஆண்டுகாலம் இருக்கிறோம்.. அவருடைய கடைசி திரைப்படம் ஜனநாயகன் என்கிற போது மனம் நொந்து போய்தான் கண்ணீர்விட்டேன். செயற்கையாக, வேண்டும் என்றே எல்லாம் கண்ணீர்விடவில்லை. அப்படி எல்லாம் விமர்சிக்காதீங்க.. ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கிறான்.. அவன் எல்லாவற்றையும் பார்க்கிறான்.. இவ்வாறு அமைச்சர் பர்வேஸ் கூறினார்.
