’ஜனநாயகன்’ பார்த்த அமைச்சர்கள் : கண்ணீர் விட்டு அழுத முகமது பர்வேஸ்

Published On:

| By Kavi

ஜனநாயகம் படத்தை பார்த்து அமைச்சர் முகமது பர்வேஸ் கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல்வர் விஜய் நடிப்பில் கடைசியாக எடுக்கப்பட்ட படம் ஜனநாயகன். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் மத்திய தணிக்கை வாரியம் ‘ஜனநாயகன்’ படத்துக்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கிய நிலையில் இன்று (ஜூலை 23) படம் ரிலீஸ் ஆனது.

ADVERTISEMENT

திரைப்படத்தின் தொடக்கத்தில் தளபதி விஜய் என்பதற்கு பதிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் விஜய், என்றும் சட்டப்பேரவையில் அவர் காட்டிய சைகையும் டைட்டில் கார்டாக இடம்பெற்று இருந்தது.

முதல்வரின் படத்தை புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் அமைச்சர் முகமது பர்வேஸ் காண வந்தார்.

ADVERTISEMENT

ஸ்கிரீனில் முதல்வர் விஜய் தோன்றிய உடன் உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் முகமது பர்வேஸ் கண்கலங்கி குலுங்கி குலுங்கி அழுதார்.

விஜய்யின் கடைசி படம் இது என்பதால் நீண்ட கால ரசிகரான பர்வேஸ் உணர்ச்சிவசப்பட்டு அழுதார் என்கிறார்கள் தமிழக வெற்றிக்கழக வட்டாரத்தில்.

ADVERTISEMENT

அதுபோன்று ரோகிணி திரையரங்கில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அருண் ராஜ் ஆகியோர் படம் பார்த்து ரசித்தனர்.

தூத்துக்குடி கிளியோபட்ரா தியேட்டரில் அமைச்சர் ஸ்ரீநாத் படம் பார்த்தார். போத்தனூர் அரசன் தியேட்டரில் அமைச்சர் விக்னேஷ் ஜனநாயகனை கண்டு களித்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share