VIDEO: விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. ‘முட்டி போட்டு மண் சோறு’ .. ‘ட்ரோன் ஷோ’.. களைகட்டிய கொண்டாட்டம்!

Published On:

| By Mathi

CM Vijay's 'Jananayagan' Release - Celebrations in Full Swing

தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் (CM Vijay) நடித்துள்ள கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ (Jananayagan) இன்று ஜூலை 23-ந் தேதி வெளியாகிறது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்களான தமிழக வெற்றிக் கழகத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என படத் தயாரிப்பு குழு சட்டப் போராட்டம் நடத்தியது.

ADVERTISEMENT

இன்னொரு பக்கம், ‘ஜனநாயகன்’ திரைப்படம் முழுமையாக இணையத்தில் லீக் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை 1.2 கோடி பேர், ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் பார்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜனநாயகன் திரைப்படம் வெளியாக நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். இதனால் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு குறித்த எதிர்பார்ப்பும் அதிகமானது. ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரான கே. வெங்கட நாராயணா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதனிடையே தடைகளைத் தாண்டி ஜனநாயகன் திரைப்படம் நீதிமன்ற அனுமதியுடன் இன்று ஜூலை 23-ந் தேதி வெளியாகிறது. ஜனநாயகன் திரைப்படத்தை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் விஜய் சென்னை அடையாறில் உள்ள என்எப்டிசி பிரிவியூ தியேட்டரில் நேற்று ஜூலை 22-ந் தேதி ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்து ரசித்தார்.

ADVERTISEMENT

சென்னையில் ஜனநாயகன் வெளியாகும் திரையரங்குகளில் மட்டுமின்றி பல இடங்களில் பிரம்மாண்டமான கட் அவுட்டுகளை வைத்துள்ளனர். ஜனநாயகன் வெளியாகும் திரையரங்குகள் முன்பாக நேற்று இரவு முதலே பெரும் எண்ணிக்கையில் கூடிய விஜய் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற்று வசூலை தயாரிப்பாளருக்கு அள்ளிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக சிதம்பரத்தில் விஜய் ரசிகர்கள் கோவிலில் மண்டி போட்டு வழிபாடு நடத்தி மண் சோறு சாப்பிட்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரையில் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வானில் டிரோன் ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சில இடங்களில் பெண்களுக்கான சிறப்பு காட்சி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் இலவசமாகவும் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் ஒரு பக்கம் விடிய விடிய போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம், முதல்வர் விஜய்யின் ரசிகர்கள் விடிய விடிய ‘ஜனநாயகன்’ கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share