ஜனநாயகன் படத்தை பார்க்கும் முதல்வர் விஜய்

Published On:

| By Kavi

தமிழக முதல்வர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தை பார்த்து வருகிறார்.

முதல்வர் விஜய் நடிப்பில் கடைசியாக எடுக்கப்பட்ட படம் ஜனநாயகன். நீண்ட போராட்டத்துக்கு பின் நாளை தமிழகத்தில் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியாகிறது.

ADVERTISEMENT

சென்னையில் உள்ள பல திரையரங்குகளில், படம் வெளியாவதையொட்டி இன்றிரவே விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தசூழலில் முதல்வர் விஜய், தான் நடித்த கடைசி படமான ஜனநாயகன் படத்தை பார்த்து வருகிறார். சென்னை, அடையாறில் உள்ள தாகூர் பிலிம் செண்டரில் தற்போது முதல்வர் விஜய் படம் பார்த்து வரும் நிலையில், அவருடன் தலைமைச் செயலக ஊழியர்கள், போலீசார் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளும் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share