இனி யாருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் இவரும் விக்ரம் மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்த படம் பைசன். இந்த படம் மூலம் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து இருவரும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, ஸ்பாட்டிஃபை இசை ஸ்ட்ரீமிங் தளத்தில் ’ப்ளூ மூன்’ என்ற தலைப்பில் வெளியான ப்ளே லிஸ்ட்டில் அனுபமா மற்றும் துருவ் இருவரும் கிஸ் கொடுத்த புகைப்படமும் வெளியானது. இது, இருவரும் காதலில் இருக்கும் தகவலை மேலும் உறுதிப்படுத்தியது.
இதுபோன்ற தகவல்களை துருவ் விக்ரமும், அனுபமாவும் உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
இந்நிலையில் நேற்று முன் தினம் அனுபமா தனது எக்ஸ் பக்கத்தில், “சில சமயங்களில் மன அமைதியை தேட, எதற்கும் உதவாத பாதைகளை கைவிட வேண்டியிருக்கும்.
அதன்படி இன்று அமைதி எனக்கு கிடைத்தது.

இன்றிலிருந்து, என் குரலை , என் வாழ்க்கையை நானே தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை, பயமும் இல்லை.
நான் தொலைத்த என் பழைய வாழ்க்கையை மீட்டு, மீண்டும் அதைக் காதலிக்கத் தொடங்கி, எனக்கான பாதையில் நான் பயணிக்கப் போகிறேன்.
மிக நீண்ட காலமாக நான் சொல்ல நினைத்த ஒரு விஷயம் இருக்கிறது…
சொல்வதற்கு எனக்கு உரிமை மறுக்கப்பட்ட ஒரு விஷயம்.
நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.
என்னை மீண்டும் என்னிடமே அழைத்து வந்ததற்குப் பிரபஞ்சமே, உனக்கு நன்றி.
என்னுடைய காயங்கள் ஆறுவதற்கான வழியை நோக்கி… என் சுதந்திரத்தை நோக்கி… எதற்காகவும் தயங்கவோ வருந்தவோ தேவையில்லாத, முழுக்க முழுக்க எனக்குரிய ஒரு வாழ்க்கையை நோக்கி…” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் துருவ் விக்ரமுக்கும் அனுபமாவுக்கு பிரேக் அப் ஆகிவிட்டதாக இணையதளவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போதைக்கு, அனுபமாவோ அல்லது துருவோ இந்த யூகங்களுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை.

அனுபமா யாரையும் குறிப்பிடாமல் இவ்வாறு பதிவு செய்திருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
