நயன்தாரா – கவின் இணைந்து நடிக்கும் ‘ஹாய்’: அனிருத் குரலில் ‘ரசகுல்லா’ பாடல்!

Published On:

| By Kavi

ஹாய் படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், நடிகர் கவின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் கவின், நடிகை நயன்தாரா நடிப்பில் ’ஹாய்’ படம் உருவாகி வருகிறது. மறைந்த கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி.டி.வி கணேஷ், சத்யன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இயக்குனர் விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 

இந்த படத்தின் முதல் பாடல் ஜிவி பிரகாஷ் குரலில் வெளியானது. ‘ கண்ணக்குழியா’ என்ற அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

ADVERTISEMENT

இந்தநிலையில் இரண்டாவது சிங்கிள் ’ரசகுல்லா’ நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.  

‘ரசகுல்லா’ பாடலின் ப்ரோமோ வீடியோவை நடிகர் கவின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.  

ADVERTISEMENT

“என் பயணத்தில் உங்கள் குரலில் மற்றொரு பாடல் அமைந்திருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எப்போதும் அளித்து வருவதற்கு நன்றி” என கவின் ட்விட்டர் பக்கத்தில் அனிருத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இப்படம்   ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share