அரங்கம் அதிர.. சட்டசபை ‘சைகை’ காட்சிகளுடன் ‘ஜனநாயகன்’ டைட்டில் கார்டு- வைரல்!

Published On:

| By Mathi

CM Vijay's Assembly Scene Becomes Title Card for 'Jananayagan'

முதல்வர் சி. ஜோசப் விஜய் (CM Vijay) நடித்துள்ள கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ (Jananayagan) தடைகளைத் தாண்டி இன்று ஜூலை 23-ந் தேதி வெளியானது.

தமிழகத்தில் நேற்று இரவு முதலே ஜனநாயகன் திரைப்படம் வெளியான திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் முதல்வர் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர். ஒவ்வொரு திரையரங்கும் முன்பாக பெருந்திரளாக விஜய் ரசிகர்கள் கூடி- ஆட்டம், பாட்டம் என கும்மாளத்தில் மூழ்கினர்.

ADVERTISEMENT

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், “இனிமேல் இப்படி எல்லாம் கொண்டாட முடியாதுல்ல..” என்ற வருத்தத்தையும் ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

சென்னை கோயம்பேடு ரோஹினி திரையரங்க வளாகத்தில், கார் மீது ஏறி விஜய் பேனருக்கு ரசிகர் ஒருவர் சூடம் காட்டினார். அவரை கீழே இறக்குவதற்குள் போலீசார் பெரும் பாடுபட்டுவிட்டனர்.

ADVERTISEMENT

ஜனநாயகன் படத்தின் டைட்டில் கார்டு சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. முதல்வரான பின்னர் விஜய், கோட் சூட் அதிகமாக பயன்படுத்துகிறார். ‘எல்லாவற்றையும் முடித்துவிட்டோம்’ என திமுக தலைவர் ஸ்டாலின் செய்த சைகையை சட்டசபையில் முதல்வர் விஜய் செய்து காட்டிய போட்டோ, டைட்டில் கார்டு இடம் பெற்றுள்ளது. இதனால் திரையரங்குகள் அதிருகின்றன. இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் என தமிழிலும் ஆங்கிலத்திலும் டைட்டில் கார்டு இடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வெளியாக இருந்த சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. காலை 10 மணிக்குதான் புதுச்சேரியில் முதல் காட்சி வெளியாகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share