வங்கக் கடலை நோக்கி முதல்வர் அலுவலகம்?

Published On:

| By Kavi

தலைமை செயலகத்தில் முதல்வர் அலுவலகம் இடம்மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் பாரம்பரியமான மைய கட்டிடத்தில் முதல்வருக்கான அறையும், அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்துவதற்கான கூட்டரங்கும் உள்ளது. 

ADVERTISEMENT

தற்போது  முதல்வர் அலுவலகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம்.

முதல்வரைச் சந்திக்க திரை பிரபலங்கள் பலரும் வருகின்றனர். அதோடு  ,முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ,தொழில் துறை நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் என பல தரப்பு அதிகாரிகள் வருகின்றனர்.

ADVERTISEMENT

அதனால் இந்த அறை போதிய இட வசதியுடன் இல்லை என கூறப்படுகிறது. முதல்வர் விஜய்யின் ஜோதிடரான ரத்தன் பண்டிட்டும்  வேறு இடத்தில் முதல்வர் அலுவலகத்தை மாற்ற அறிவுறுத்தியிருக்கிறார். 

அதாவது,  முதல்வர் விஜய் கடக ராசியை சேர்ந்தவர். கடக ராசி நீர் தத்துவம் கொண்ட ராசி. முதல்வர் விஜய்யின் அலுவலகம் கடலைப் பார்த்து இருந்தால் ஆட்சிக்கும், அவருக்கும் நல்லது.  இதனை செய்துவிட்டால் முதல்வர் விஜய்தான் வாழ்நாள் முதல்வர் என ஜோதிடர் ரத்தன் பண்டிட் ஆலோசனை தெரிவித்துள்ளாராம்.

ADVERTISEMENT

மேலும், முதல்வர் விஜய்யை, தலைமைச் செயலகத்தில் பார்க்கவே திரையுலக பிரபலங்கள் ஆசைப்படுகிறார்களாம். இதனால், நடிகர், நடிகைகள் வரும் போது வழக்கத்தைவிட கும்பல் குவிந்துவிடுகிறது.

கும்பலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தவிக்கிறார்களாம்.  இதை எல்லாம் கூட்டி கழித்து பார்த்துத்தான் முதல்வர் விஜய்க்கு தனி அலுவலகம் ரெடியாகி வருகிறது.

தலைமைச் செயலகத்தில் 10ஆவது மாடியில் உள்ள நாமக்கல் கவிஞர் அரங்கில் முதல்வர் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் நடைபெறவிருப்பதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share