மத்திய அமைச்சர் ராஜினாமா!

Published On:

| By Kavi

மத்திய இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார்.

ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறைக்கான இணை அமைச்சர் ரவ்னீத் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ADVERTISEMENT

இந்தசூழலில் பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று ரவ்னீத் சிங் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் இன்று (ஜூலை 24) ஏற்றுக்கொண்டுள்ளார். 

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் போராடி வரும் நிலையில் ரவ்னீத் சிங்கின் திடீர் ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் காங்கிரஸில் செயல்பட்டு வந்தார். 2024 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 

தேர்தல் பிரச்சாரத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா,  ”ரவ்னீத் சிங் பாஜகவின் முகம்” என்று கூறியிருந்தார். 

ADVERTISEMENT

 2024-ல் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் இணை அமைச்சராகச் சேர்க்கப்பட்டார்.

தற்போதுஅவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில்  வரும் 2027ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share