காவிரி (Cauvery) நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகா அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் (CM Vijay) அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த முடியாது என கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு தயார் என கர்நாடகா அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் அனுப்பினார். இதனடிப்படையில் ஆகஸ்ட் 3-ந் தேதி பெங்களூருவில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை ஏற்று தமிழக முதல்வர் விஜய், ஆகஸ்ட் 3-ந் தேதி கர்நாடகா செல்ல இருப்பதாக தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார், காவிரி பிரச்சனைக்காக யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார். அதேநேரத்தில் தமிழக முதல்வர் விஜய், கர்நாடகா அரசுக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட முடியாது. அதை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த முடியாது என்றார்.
