நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஜூலை 20-ந் தேதி திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.யுடன் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குதூகலமாக பேசி, விளையாடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில் இந்த போட்டோ பற்றி திமுகவினர் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

திமுக மாணவர் அணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார், “என்னா தொங்கினாலும் பாச்சா இனி பழிக்காது” என ஜோதிமணியை விமர்சித்துள்ளார்.
வீரமணி ஜெயக்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த போட்டோவுக்கு திமுகவினர் கருத்துகள்:
Anand Anbu: பார்க்க சகிக்கவில்லை சகோதரி!
நம் இயக்கம் தான் நமக்கு முக்கியம்!
நம் இயக்கத்தை அழிக்க நம் முதுகில் குத்திச்சென்ற பச்சை துரோகிகள்!
தன் சுய நலனுக்கு உங்கள் உயிரையும் எடுக்க தயங்க மாட்டார்கள்!
எவ்வளவோ துரோகங்களை பார்த்து வளர்ந்த கழகம்!
இனியும் வேண்டாம் இந்த கேடுகெட்ட நாகரீகம்!
இவர்கள் துளியும் நட்புக்கு தகுதியானவர்கள் இல்லை! பச்சை துரோகிகள்!
லட்சோப லட்ச கழக உடன்பிறப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கைவிடுங்கள் துரோகிகளின் நட்பை! முடிந்தால் எதிரிலிருந்து சண்டையிட்டு வென்றுக்கொள்ளட்டும்! துரோகிகள்!
Panju Aravindan: அன்பாக பிடித்த மாதிரி தெரியலை..
சிரித்து கொண்டே கழுத்தை… காங்கிரஸ் பழக்கம்.
Balachandran Ayakudi: துஷ்டனை கண்டால் தூரப்போ.
கூடாநட்பு கேடாய் முடியும்-கலைஞர் பொன்மொழி
Annamalai Rajkumar: இது நியாயமா??? இங்கு தொண்டரர்கள் காங்கிரஸ்டன் சண்டை செய்கின்றனர் ஆனால் நீங்கள் மீண்டும் நாகரிக அரசியல் இது நியாயம் தானா?? தொண்டர்களின் உணர்வுகளுகாகு மதிப்பில்லையா?
Silambarasan Krishnasamy: கூட்டணியில் இருக்கும்போதே திமுகவிற்கு தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கிய ஜோதிமணியுடன் நமது கழக துணைப்பொதுச்செயலாளரே இப்படி ஒரு புகைப்படம் எடுக்க அனுமதிக்கிறார் எனில், தொண்டர்களுக்கு சொல்லவரும் செய்தி என்ன?
Fajaludeen Dmk: நான் ஒரு திமுக தொண்டன் நமது கூட்டணியில் இருந்தவர்கள் துரோகிகளாக மாறிவிட்டார்கள் நாங்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்
பாராளுமன்ற அலுவலகத்தில் வெளியே தோள் மீது தோள் போட்டு போஸ் கொடுத்து போட்டோ போட்டு இருக்கிறீர்கள் இதுதான் தொண்டர்கள் கொடுக்கக்கூடிய மரியாதையா வெளியில் சண்டையிடுவது உள்ளே நண்பர்களாக இருந்து கொண்டிருக்கிறீர்கள் பாதிக்கப்படுவது தொண்டர்கள்தான்
சிவ.பூபதி சிவக்குமார்: துரோகிகளை அரவணைக்கக் கூடாது அக்கா….!

திண்டுக்கல் திமுக மாவட்ட பிரதிநிதி கவுன்சிலர் ரா.வி.ஆனந்த ஜோதி, “துரோகிகள் முன்னாடி எப்படி சிரிக்க முடிகிறது…நாம் சற்று பாதைமாற வேண்டும்,ஜனநாயக கோட்பாடு நம் கட்சிக்கே ஆபத்து தான் விளைவிக்கிறது ? விலகி நில்லுங்கள் கனிமொழி அக்கா” என தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், “Jamal Mohamed Mufee: நீங்கள் கூறுவது தவறு,
அப்படி என்றால் H. ராஜா வை சந்தித்து இருந்திருக்க கூடாது. தற்போது உள்ள முதல்வர் வந்து சந்தித்தை தவிர்த்து இருக்க வேண்டும். அரசியல் வேறு !
நாகரிகம் வேறு !! இரண்டையும் கலக்க வேண்டாம்” எனவும் பதிவிட்டுள்ளார்.

அரசியலைக் கடந்த..
இந்த போட்டோ குறித்து திமுக கல்வியாளர் அணி மாநில துணை செயலாளர் அனிச்சம் கனிமொழி தமது ஃபேஸ்புக் பக்கத்தில், “அரசியலைக் கடந்த நண்பர் என்கிற வார்த்தையை தலைவர் கலைஞர் வரலாற்றில் வாசித்திராத …
கலைஞர் – எம்ஜிஆர் நட்பை அறிந்திடாத … பெரியார் – இராஜாஜி உறவை படித்திராத … பேருக்கு கட்சிக்காரர் என்றிருப்போர் தான் இந்தப் படத்தை போட்டு விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் ஏதோ ஒரு அரை இருக்கர் எழுதியதை காப்பி பேஸ்ட் செய்யும் உடன் பிறப்புகளை என்ன சொல்வது?
இந்தப் படங்கள் பொதுவெளியில் அனைவர் முன்னிலையில் எடுக்கப் பட்டிருக்கிறது. தனியாக திரைமறைவில் அல்ல.
பிளவு வந்த பிறகு, நெடுநாள் பழகியவரை வழியில் காணும் போது நட்போடு அணுகுவது தான் மனித முறைமை.
சொந்தக் கட்சியை விட்டுத் தரும் பதிவுகளை எழுதுபவர்கள் , அதை மாய்ந்து மாய்ந்து லைக் க்குகாக ஷேர் செய்பவர்கள் எதைச் செய்கிறோம் என்பதை ஒரு முறை நிதானித்துச் செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
