கைது செய்யப்பட்ட தெருக்குரல் அறிவு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு!

Published On:

| By Kavi

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பாடகர் அறிவு முதல்வர் விஜய்யை சந்தித்து பேசி வருகிறார்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி, லத்தியால் தாக்கியது நாடு முழுவதும அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இன்று (ஜூலை 21) தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

இதில் தமிழகத்தில் தலைமைச் செயலகம் முன்பு ராப் பாடகர் அறிவு நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் குரல் கொடுக்க வலியுறுத்தி கோஷமிட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில் மீண்டும் தலைமை செயலகத்துக்கு அழைத்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்தசூழலில் முதல்வர் விஜய்யை சந்தித்து தெருக்குரல் அறிவு பேசி வருகிறார். அவர் உள்ளே செல்லும் போது உங்களுக்கு முதல்வரை நன்றாக தெரியும், அப்படியிருக்கும் போது போராடியது ஏன் என்ற கேள்விக்கு, ”மாணவர்களை அடிக்கக் கூடாது. அது ஜனநாயகத்துக்கு விரோதமானது” என்று பதிலளித்துவிட்டு உள்ளே சென்றார்.

ராப் பாடகர் அறிவு தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடலை எழுதி இசையமைத்து பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share