ADVERTISEMENT

ஜி.எஸ்.டி. படிவம்: 27-ம் தேதி வரை கால அவகாசம்!

Published On:

| By Kavi

Deadline for filing GST has been extended

ஜிஎஸ்டி படிவத்தைத் தாக்கல் செய்ய நேற்று (டிசம்பர் 20) கடைசி நாளாக இருந்த நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் உள்ளன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம்-9’ பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், வணிகர்கள் ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்ய வருகிற 27-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஜிஎஸ்டி படிவத்தை தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாக இருந்த நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்ட வணிகர்களுக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் அளித்து வணிக வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18-ம் தேதிகளில் அதிகன மழை பெய்துள்ளதால் இந்த மாவட்ட வணிகர்களுக்கும் ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

பியூட்டி டிப்ஸ்: குளிர்காலத்தில் கூந்தலைப் பராமரிப்பது எப்படி?

கிச்சன் கீர்த்தனா: அமெரிக்கன் சாப்ஸி

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பொன்முடிக்கு தண்டனை: அலர்ட் நிலையில் போலீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share