தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று டிசம்பர் 19 ஆம் தேதி தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், தண்டனை விவரத்தை டிசம்பர் 21 ஆம் தேதி தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பொன்முடிக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற கேள்வி சட்ட வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பலமாக எதிரொலிக்கிறது, பொன்முடியின் சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்டம் உட்பட தமிழகம் எங்கும் திமுக நிர்வாகிகளிடம் இதுவே பேச்சாக இருக்கிறது.
இந்த நிலையில் டிசம்பர் 20 ஆம் தேதி இரவு 8 மணிக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யிடம் இருந்து மாவட்டத்திலுள்ள அனைத்து டி.எஸ்.பி.க்களுக்கும், இன்ஸ்பெக்டர்களுக்கும் முக்கிய உத்தரவு பறந்திருக்கிறது. அவர்கள் மூலமாக இந்த உத்தரவு ஓப்பன் மைக்கில் அடுத்தடுத்த நிலையில் இருக்கும் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன உத்தரவு?
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்டத்திலுள்ள ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பஸ் ஸ்டாண்டு,. திருச்சி- சென்னை பைபாஸ் சாலையிலுள்ள முக்கிய இடங்கள், மயிலம் கூட் ரோடு, திண்டிவனம் கூட் ரோடு உள்ளிட்ட முக்கியமான பொது இடங்களில் டிசம்பர் 21 காலை 6 மணி முதலே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எஸ்.பி. போட்டிருக்கும் உத்தரவு.
விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போலீஸார் தொடர்ந்து ரோந்து பணியில் இருக்க வேண்டும் என்றும், போலீஸார் ஸ்ட்ரெங்த் தேவையெனில் ஆயுதப் படை வீரர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 21 காலை 10.30க்கு பொன்முடிக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் டிசம்பர் 20 ஆம் தேதி இரவே எதற்கும் தயாராகிவிட்டது.
–வணங்காமுடி
2011-2023… எஃப்.ஐ.ஆர். முதல் தீர்ப்பு வரை- பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கின் முழு விவரம்!
’ஐபில் ஏலத்துல இப்படி ஒரு உண்மையா?’: அப்டேட் குமாரு