சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

Published On:

| By Pandeeswari Gurusamy

Migration Certificate in Digi Locker

நாடு முழுவதும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு (Session 1) முடிவுகள் இன்று இணையத்தில் (ஏப்ரல் 15)வெளியானது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி17ம் தேதி தொடங்கி மார்ச் 11 ம் தேதி வரை நடைபெற்றது. சிபிஎஸ்இ நிர்வாகம், இன்று பிற்பகல் 4.30 மணியளவில் 10ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

cbse.gov.in, results.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதிகாரபூர்வ இணையதளங்களில் அதிகமானோர் பார்ப்பதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க டிஜிலாக்கர் மூலம் முடிவுகளை பார்வையிடலாம்.

நாடு முழுவதும் தேர்வெழுதிய 93.7 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 1.47 லட்சம் மாணவர்கள் இரண்டாம் கட்ட தேர்வை எழுத வேண்டிய நிலையில் உள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share