காங்கிரஸ் செயற்குழு கூட்டம்!
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று (டிசம்பர் 21) நடைபெற உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
வெள்ள பாதிப்பு முதல்வர் ஆய்வு!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
பொன்முடி தண்டனை விவரங்கள்!
உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மோதல்!
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
கன மழை விடுமுறை!
மழை, வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பயண டோக்கன்!
சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 572-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்தியா, இங்கிலாந்து மோதல்!
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடிக்கு தண்டனை: அலர்ட் நிலையில் போலீஸ்!
பொன்முடியின் அமைச்சர் பதவி யாருக்கு?