இந்தோ – சைனீஸ் உணவகங்களில் மிகவும் பிரபலமான உணவு இந்த அமெரிக்கன் சாப்ஸி. சுவாரஸ்யமான மற்றும் ஆரோக்கியமான, சுவை மிகுந்த இந்த அமெரிக்கன் சாப்ஸியை நீங்களும் ருசிக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
பிளெயின் நூடுல்ஸ் (ஏதாவது ஒரு சிறுதானிய நூடுல்ஸ்) – ஒரு பாக்கெட்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – கால் கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – 2 டேபிள்ஸ்பூன்
சதுரமாக நறுக்கிய கேரட் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ், டொமேட்டோ சாஸ் – தலா ஒரு டீஸ்பூன்
ஃபுட் வினிகர் – ஒரு டீஸ்பூன்
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு – 2 டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
மைதா மாவில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் அரை பாக்கெட் நூடுல்ஸை பொரித்தெடுக்கவும். மீதமுள்ளவற்றை தண்ணீரில் வேகவைத்து எடுத்துவைக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி, இஞ்சி-பூண்டு பேஸ்ட், சிறிது வெங்காயத்தாள், உப்பு சேர்த்து வதக்கி, சோயா சாஸ், டொமேட்டோ சாஸ், வினிகர் சேர்த்துக் கிளறவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து, கரைத்துவைத்துள்ள மைதா மாவை இதில் சேர்த்து, பச்சை வாசனை நீங்கும்வரை கிளறி அடுப்பை அணைத்து, கலவையில் சர்க்கரை தூவவும். அதில் வேகவைத்த மற்றும் பொரித்த நூடுல்ஸ் சேர்த்துக் கிளறி, மீதமுள்ள வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: தூதுவளை ஸ்பாஞ்ச் தோசை!
கிச்சன் கீர்த்தனா : மேத்தி கோட்டா