‘அக்வான்’ தீவிர புயல்.. ஆந்திரா- தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியில் நாளை கரையைக் கடக்கும்!

By Mathi

|

Published on 19 Nov 2026, 9:24 AM

Cyclone Akvan Odisha Andhra

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அக்வான் தீவிர புயல் நாளை (நவம்பர் 20) நண்பகலில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அக்வான் தீவிர புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்று (நவம்பர் 19) அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் வடக்கு அட்சரேகை 14.5° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 85.3° பகுதியில் மையம் கொண்டுள்ளது.

சென்னையிலிருந்து 580 கி.மீ. தொலைவில்

அக்வான் புயல் தற்போது ஆந்திரா மாநிலம் நரசாபுரத்திற்கு கிழக்கு-தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவிலும், கலிங்கப்பட்டினத்திற்கு தெற்கு-தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தின் சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே 580 கி.மீ. தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்குத் தெற்கே 530 கி.மீ. தொலைவிலும், பூரிக்குத் தெற்கே 590 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

நாளை நண்பகல் கரையைக் கடக்கும்

அக்வான் புயல் தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 20) நண்பகலில் வடக்கு ஆந்திரா, ஏனாம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக, நரசாபுரம் முதல் பூரி வரையிலான கடற்கரைப் பகுதியில், கோபால்பூருக்குக் கிழக்கே அருகில் புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அப்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் 110 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel