குடிநீர் தொட்டியில் மலம்..? ‘காக்கா தான் காரணம்’ : ஆட்சியர் விளக்கம்!

Published On:

| By christopher

no shit mixed in water tank

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதை போன்ற துர்நாற்றம் அடித்ததாக செய்திகள் பரவிய நிலையில், ’குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை’ என மாவட்ட ஆட்சியர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். no shit mixed in water tank

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் ஊர்மக்கள் பயன்படுத்தும் பொது தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருத்தணியில் உள்ள பள்ளி சத்துணவுக் கூடத்தின் பூட்டிலும், கதவிலும் மலம் பூசப்பட்டிருந்த விவகாரமும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி குடிநீர் தொட்டியில் இன்று (நவம்பர் 21) மலம் கலக்கப்பட்டதாக வெளியான தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள இன்று மதியம் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதை போன்ற துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

சுமார் 90 மாணவர்கள் படித்து வரும் பள்ளியில் இந்த செய்தியால் பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை நிறுத்தினர். குடிநீர் தொட்டியை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட திருவந்தவார் பள்ளிக்கு நேரில் சென்று குடிநீர் தொட்டியை திறந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ”காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் நடு நிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், அழுகிய முட்டையை காகம் கொண்டு வந்து தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளது. குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை” என ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய குடிநீர் தொட்டியை இடித்து உடனடியாக புதிய தொட்டி கட்டவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா no shit mixed in water tank

வந்தாச்சு இ-மெயில் வெரிபிகேஷன் முறை…. அறிமுகப்படுத்தியது வாட்ஸ்ஆப்!

மாஜிக்கள் மீது ஆளுநர் ஆக்‌ஷன்… எடப்பாடி ரியாக்‌ஷன்!

WorldCup2023: ’எரியும் நெருப்பில் எண்ணெய்…’ ஷமியின் முன்னாள் மனைவிக்கு குவியும் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share