WorldCup2023: ’எரியும் நெருப்பில் எண்ணெய்…’ ஷமியின் முன்னாள் மனைவிக்கு குவியும் கண்டனம்!

விளையாட்டு

தன்னுடைய இன்ஸ்டாகிராம் போஸ்டால் மொஹம்மது ஷமியின் முன்னாள் மனைவி ஹாசின் ஜஹான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக கோப்பையை வென்றது. போட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆனாலும் கூட இந்தியாவின் தோல்வி சோகத்தில் இருந்து ரசிகர்களால் இன்னும் மீள முடியவில்லை.

இந்த நிலையில் இந்திய வீரர் மொஹம்மது ஷமியின் முன்னாள் மனைவி ஹாசின் ஜஹான் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள வீடியோ ஒன்று, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் அவர், ‘நல்ல இதயம் கொண்டவர்கள் வெற்றி பெற்றார்கள்’ என்று பகிர்ந்துள்ளார்.

ஷமியை டார்கெட் செய்து அந்த வார்த்தைகளை பதிவிட்டாரா? இல்லை ஒட்டுமொத்த இந்திய அணியையும் டார்கெட் செய்தாரா? என்பது தெரியவில்லை.

இதைப்பார்த்த ரசிகர்கள் ’இப்படி ஒரு பதிவை போட்டு இருக்கிறீர்களே?’ என்று அவரை திட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வீடியோ பதிவிட்டது குறித்த எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை அவர் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

மாஜிக்கள் மீது ஆளுநர் ஆக்‌ஷன்… எடப்பாடி ரியாக்‌ஷன்!

இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அடுத்த அதிர்ச்சி!

சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *