விவாகரத்து மனுவை வாபஸ் பெற்ற சங்கீதா

Published On:

| By Kavi

முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார்.

முதல்வர் விஜய்யும், சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் நடிகை ஒருவருடன் தனது கணவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு ஏப்ரல் 20, ஜூன் 15 என இருமுறை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது லண்டனில் இருந்து காணொளி மூலம் சங்கீதா ஆஜரானார். சட்டமன்றம் நடப்பதால் முதல்வர் விஜய் ஆஜராகவில்லை.

ADVERTISEMENT

இன்றைய விசாரணையின் போது சங்கீதா 20 நிமிடங்கள் தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார். அதைத்தொடர்ந்து வழக்கு இன்றைய தினமே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்தநிலையில் சங்கீதா தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால் வழக்கை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share