மெட்டா நிறுவனமானது மெயில் ஐடி கொண்டு வாட்ஸ்ஆப் வெரிபிகேஷன் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு இந்த முறை சோதனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது சோதனை முடிந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
முதலில் வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷனிற்கு மட்டும் அறிமுகப்படுத்தி இருந்த இம்முறை தற்போது IOS வெர்ஷனிலும் அறிமுகமாகியுள்ளது. விரைவில் ஆன்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகமாகவுள்ளது.
உலகலவில் 2.78 பில்லியன் மக்கள் வாட்ஸ்ஆப் பயனாளர்களாக உள்ளனர். வாட்ஸ்ஆப் சேனல், எடிட் ஆப்சன் என மகிழ்ச்சியான அப்டேட்டுகளையும், பேக்அப் செய்வதற்கு கட்டணம் போன்ற சில வருத்தம் தரக்கூடிய அப்டேட்களை கொடுத்து வருகிறது மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப்.
வாட்ஸ்ஆப் அப்டேட் 23.24.70-ல் இருந்து இந்த இமெயில் வெரிபிகேஷன் அப்டேட் கிடைக்கும். இம்முறை ஒரு கூடுதல் வெரிபிகேஷன் முறை மட்டுமே. மொபைல் நம்பர் வெரிபிகேஷன் முறைதான் முதன்மையாக உள்ளது.
இந்த இ-மெயில் வெரிபிகேஷன் முறையை பயன்படுத்துவதால் குறைந்த நெட்ஒர்க் இருக்கும் இடங்கள் மற்றும் டேட்டா இல்லாத நேரத்தில் வைபை கனெக்ட் செய்து இ-மெயில் வெரிபிகேஷன் செய்து பயன்படுத்தலாம்.
வாட்ஸ்ஆப்பில் செட்டிங்கிற்குள் சென்று அக்கவுண்டை ஓபன் செய்தால் அதில் வெரிபிகேசனில் மொபைல் நம்பர் மற்றும் மெயில் என இரண்டு ஆப்ஷன் இருக்கும் அதில் மெயில் முறையை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மன்சூரும் மணிப்பூரும்: அப்டேட் குமாரு
WorldCup2023: ’எரியும் நெருப்பில் எண்ணெய்…’ ஷமியின் முன்னாள் மனைவிக்கு குவியும் கண்டனம்!