கம்யூனிஸ்ட்கள் விஜய்க்கு ஆதரவு – கொண்டாட்டத்தில் தவெக தொண்டர்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

நடிகர் விஜய்யின் தவெகவிற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில் தவெக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெகவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தவெக ஆட்சி அமைக்க ஏற்கனவே 5 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தவெக ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் தலா 2 எம்எல்ஏக்களை கொண்டுள்ள சிபிஐ, சிபிஎம், விசிகவிடம் தவெக தரப்பு ஆதரவு கோரியது.

இதைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் மற்றும் விசிக விஜய்க்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து இன்று விஜய் மீண்டும் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்திற்கு முன்பு தவெக தொண்டர்களும் ஆதரவாளர்களும் கொண்டாடி வருகின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share