விஜய்க்கு சிபிஎம் ஆதரவு- அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Published On:

| By Mathi

CPM TVK

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க சிபிஎம் கட்சியும் ஆதரவு தருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

107 எம்.எல்.ஏக்களைக் கொண்ட விஜய்யின் தவெக ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. விஜய்க்கு ஏற்கனவே 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவு தந்துள்ளது. இதனால் மேலும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு என்ற நிலையில் சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளின் ஆதரவை விஜய் கோரினார்.

விஜய்யின் இந்த கோரிக்கையின் அடிப்படையில் சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மாநில குழுக்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட சிபிஐ, விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக முதலில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட சிபிஎம் கட்சியும் விஜய்க்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து விஜய் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 116 ஆக உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share