திருமா ஆதரவு இல்லாமல் விஜய் ஆட்சி அமைக்க முடியுமா?

Published On:

| By Mathi

VCK Vijay Thirumavalavan

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க விஜய்க்கு சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஆதரவு தரும் நிலையில் திருமாவளவனின் ஆதரவு உடனடியாக விஜய்க்கு தேவைப்படுகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்ற இடங்கள் 108. இதில் விஜய் 2 தொகுதிகளில் வென்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்வார். அதனால் தவெக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 107.

ADVERTISEMENT

தவெக ஆட்சி அமைக்க ஏற்கனவே 5 எம்.எ.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவு தந்துவிட்டது. தற்போது 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட சிபிஐ, 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட சிபிஎம் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு தந்துவிட்டன.

தற்போதைய நிலையில் விஜய்க்கு 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்வதால் சட்டசபையில் மொத்த பலம் 233. பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 117.

விஜய்யின் மெஜாரிட்டிக்கு தேவை 1 எம்.எல்.ஏ.

ADVERTISEMENT

இந்த நிலையில் 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை. விசிகவின் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும்; நாளை தான் முடிவை அறிவிப்பேன் என திருமாவளவன் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில் ஆளுநரை சந்திக்க போகும் விஜய்க்கு தேவை 1 எம்.எல்.ஏ. ஆதரவுதான்.

1 எம்.எல்.ஏ.வை வைத்திருக்கும் டிடிவி தினகரனின் அமமுக ஏற்கனவேஆதரிப்பதாக விஜய்க்கு தகவல் தெரிவித்துள்ளது. விஜய்க்கு ஆதரவு கடிதம் தருவதற்கு அமமுக தயார் நிலையில் உள்ளது. விஜய் அதை ஏற்றுக் கொண்டால் பெரும்பான்மைக்கான 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இப்போதைக்கு கிடைத்துவிடும். இருந்தாலும் விசிகவின் ஆதரவுக்காக விஜய் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share