தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க சிபிஐ ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து சிபிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தநிலையில், தற்போது ஆதரவை உறுதிப்படுத்தியது.
தவெகவிற்கான ஆதரவுக் கடிதம் அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமாரிடம் இன்று (மே 8) வழங்கப்பட்டது.
அதில், “எங்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியனின் அறிவுறுத்தலின்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்றக் குழுத் தலைவர் டி. ராமச்சந்திரன் ஆகிய நான், எங்கள் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாக, சி. ஜோசப் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் அரசு அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தமிழக மக்களுக்கு ஒரு நிலையான, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை வழங்கும் நோக்கில் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது.
எனது இந்த நிபந்தனையற்ற ஆதரவை ஆளுநர் கோப்பில் பதிவு செய்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
