விஜய்க்கு சிபிஐ நிபந்தனையற்ற ஆதரவு- அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Published On:

| By Mathi

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க சிபிஐ- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

107 எம்.எல்.ஏக்களைக் கொண்ட விஜய்யின் தவெக ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஏற்கனவே விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் ஆதரவை கோரியும் விஜய் கடிதம் அனுப்பி இருந்தார். இதனடிப்படையில் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் இன்று காலை முதல் ஆலோசனை நடத்தின.

தற்போதைய நிலையில் 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- சிபிஐ, விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து விஜய் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share