விஜய்க்கு சிபிஐ, சிபிஎம் ஆதரவு-ஆளுநரை மீண்டும் சந்திக்கும் விஜய்

Published On:

| By Mathi

CPI CPM TVK Govt

தமிழக தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெகவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தவெக ஆட்சி அமைக்க ஏற்கனவே 5 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தவெக ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்பதால் தலா 2 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள சிபிஐ, சிபிஎம், விசிகவிடம் ஆதரவு கேட்டிருந்தார் விஜய்.

ADVERTISEMENT

இதனடிப்படையில் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் இன்று காலை முதல் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டங்களில் விஜய் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிபிஐ, சிபிஎம் கட்சிகள் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் விசிக ஆலோசித்து முடிவெடுக்கும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதனையடுத்து சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தரும் ஆதரவுக் கடிதங்களுடன் இன்று மாலை மீண்டும் ஆளுநர் அர்லேகரை விஜய் சந்திக்க இருக்கிறார்.

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்ன்ர் ஆளுநரை 3-வது முறையாக விஜய் சந்திக்கிறார். தனிப்பெரும் கட்சியாக தவெக இருந்த போதும் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் என்கிற மெஜாரிட்டி இல்லை என ஆளுநர் மாளிகை நேற்று தெரிவித்திருந்தது. தற்போது மெஜாரிட்டி எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை விஜய் சந்திக்க செல்கிறார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share