விஜய்க்கு ஆதரவு கடிதம்.. முடிவை நோக்கி கம்யூனிஸ்டுகள்!

Published On:

| By Mathi

CPI CPM TVK

விஜய் ஆட்சிக்கு ‘குறைந்தபட்ச’ செயல் திட்டத்துடன் வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என சிபிஐ, சிபிஎம் ஆலோசனைக் கூட்டங்களில் அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தவெக ஆட்சி அமைக்க விஜய் ஆதர கோரியது குறித்து சிபிஐ, சிபிஎம் கட்சிகள் இன்று காலை முதல் தீவிரமான ஆலோசனைகளை நடத்தி வருகின்றன.

ADVERTISEMENT

மதிய உணவு இடைவேளையில் இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் நாம் பேசிய போது, “மக்களால் இந்த தேர்தலில் நிராகரிக்கப்பட்ட அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தருவது என்பது மக்களின் மனநிலைக்கு எதிரானது. அதனால் விஜய்யின் தவெக ஆட்சிக்கு ஏன் வெளியில் இருந்து ஆதரவு தரக் கூடாது? என்கிற கருத்தை அதிகம் பேர் முன்வைத்தனர். முந்தைய காலங்களைப் போலவே குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி அதனடிப்படையில் விஜய் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்பதுதான் இந்தக் கூட்டத்தில் பேசிய பலரது கருத்தாக இருக்கிறது” என்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share