தவெக ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆதரவு தரும் அறிவிப்பை வெளியிடுவார்கள் என தவெக மூத்த தலைவர் செங்கோட்டையனிடம் அக்கட்சித் தலைவர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என சிபிஐ, சிபிஎம், விசிகவிடம் விஜய் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். மேலும் இந்த கட்சித் தலைவர்களிடம் விஜய் போனில் பேசியிருந்தார். அத்துடன் தவெக நிர்வாகி சிடி நிர்மல்குமார் நேற்று இக்கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்தும் ஆதரவு கேட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சிபிஐ, சிபிஎம் கட்சிகள் விஜய்யின் கோரிக்கை தொடர்பாக இன்று காலை முதல் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனிடம், “கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டத்தில் நமக்கு ஆதரவாக்த்தான் பேசி வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் நமக்கு ஆதரவு தரும் அறிவிப்பை வெளியிட்ட உடன் அக்கட்சித் தலைவர்களை நீங்கள் நேரில் சென்று சந்திக்க வேண்டும்.. அதற்கு தயாராக இருங்கள்” என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
