அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு?அதெப்படி எதிரியும் எதிரியும் நண்பனாக முடியும்? காங்கிரஸ் கேள்வி

Published On:

| By Mathi

ADMK DMK Congress1

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க திமுக ஆதரவு தருவது குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி: எதிரிக்கு எதிரி நண்பன். ஓகே! எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? வரலாற்றுப் பிழை. தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.

ADVERTISEMENT

மாணிக்கம் தாகூர் எம்.பி: இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள்.
தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை.
ஒரே ஒரு மனிதனை நிறுத்த
விஜய்யை. காங்கிரஸ் தெளிவாக பார்த்தது வெளியேறியது. RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.
“நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? Who is a betrayer?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share