டிஜிட்டல் திண்ணை: ‘சிஎம்’ விஜய் பதவியேற்பு.. முதல் கையெழுத்து.. அறிவிக்க போகும் 2 அதிரடி திட்டங்கள்!

Published On:

| By Mathi

Vijay CM TVK

வைஃபை ஆன் செய்ததும், “ கொடி பறக்குற காலம் வந்தாச்சு.. வந்தாச்சு”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. கோட்டையை பிடிச்ச குஷியில இருக்கிறீரா?

ADVERTISEMENT

நா எங்கய்யா கோட்டையை பிடிச்சேன்.. கோட்டையை பிடிச்சது விஜய்.. விஜய் அடுத்து என்ன செய்யப் போறாருன்னுதான் ஊரு உலகமே உத்துப் பார்த்துகிட்டு இருக்கே..

ஆமாய்யா.. எப்ப பதவியேற்பு? எது முதல் கையெழுத்து? என்ன அறிவிப்பு?

ADVERTISEMENT

சரமாரியா கேள்வி கேட்டா எப்படி? முதல்ல ஆட்சி அமைக்க பெரும்பான்மை எம்.எல்.ஏக்களை சேர்க்கனும்.. அதுக்கான பேச்சுவார்த்தைகள்தான் ரொம்பவே தீவிரமா நடக்குதுன்னு நாம சொல்லி இருக்கிறோம்..

தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களை தவெக வாங்கினதால விஜய்யை ஆளுநர் அழைச்சு பேசுவாரு.. அப்ப, “மே 7-ந் தேதி பதவியேத்துக்கிறோம்.. அடுத்த 15 நாட்களில்ல சட்டசபையில பெரும்பான்மையை நிரூபிக்கிறோம்”னு ஆளுநர்கிட்ட சொல்ல இருக்கிறாராம் விஜய்.

ADVERTISEMENT

அடுத்ததா கோட்டை மேட்டருக்கு வருவோம்.. கோட்டைக்கு போன உடனே விஜய் என்ன கையெழுத்து போடுவாருன்னு ஏகப்பட்ட ஹேஸ்யங்கள் உலா வருது..

அதுல, “நாம ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிஷம் என்ன செய்யப் போறேன்னு சொல்றேன்” அப்படிங்கிற விஜய் பேசிய வீடியோதான் ரொம்பவே வைரலாகிட்டு இருக்கு..

அந்த வீடியோவில, “ தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா குடும்பங்களுக்கும் உறுதுணையா இருக்கத்தான் நாம அரசியலுக்கு வந்தோம்.. அந்த எண்ணத்தோட வெளிப்பாடுதான் ஒவ்வொரு குடும்பத்துக்கான நம்மோட உத்தரவாதம்.. 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், என்னோட பாட்டி, அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சிக எல்லாரும் தமிழ்நாட்டுல எல்லா இடத்துக்கும் அனைத்து அரசு பேருந்திலும் கட்டணமில்லாமலே போகலாம்”னு சொல்லி இருக்கிறார்..

நாமும் விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட இதை பத்தி விசாரிச்சப்ப, “தேர்தல் அறிக்கையில தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். சொல்லி இருந்தோம்.. அதே மாதிரி “தற்போது மகளிர் கட்டணமில்லாப் பயணம் குறிப்பிட்ட அரசுப் பேருந்துகளில் மட்டுமே
நடைமுறையில் உள்ளது. இந்தநிலையை மாற்றி, மாநிலம் முழுவதும் இயங்கும் நகர, மாநகர,
மாவட்டங்களுக்கிடையிலான அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல்
பயணிக்கும் வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும்”னு சொல்லி இருந்தோம்..

இந்த ரெண்டு ஸ்கீமுக்குதான் சிஎம் சேரில் விஜய் உட்கார்ந்த உடனே முதல்ல கையெழுத்து போட இருக்கிறாரு.. “ன்னு சொல்றாங்கய்யா என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share