தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

17 ஆவது தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் கண்டது. முதல் தேர்தலிலேயே விஜய் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தவெக மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து இன்று (மே 5) தவெக தலைமை அலுவலகத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பங்கேற்ற விஜய் கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதம் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், எம்எல்ஏக்களின் ஒருமித்த ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் பதவியேற்க அழைப்பு விடுக்குமாறு கடிதம் கொடுப்பதற்காக ஆளுநரை சந்திக்க தவெக தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share