போராட்டத்தை கைவிடுவதாக ‘காக்ரோச்’ ஜனதா கட்சி அறிவிப்பு!

Published On:

| By Mathi

Cockroach' Janata Party Announces Call-Off of Protest

நீட் (Neet) தேர்வு மோசடிகளுக்கு எதிராக டெல்லியில் நடத்தி வந்த போராட்டத்தை கைவிடுவதாக காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அறிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது காக்ரோச் ஜனதா கட்சியின் முதன்மை கோரிக்கை. இதற்காக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று தர்மேந்திர பிரதான் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்; டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசுடன் காக்ரோச் ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தையில் , தங்களது கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து டெல்லி போராட்டத்தைக் கைவிடுவதாக காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்திருக்கிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share