காவிரி: கர்நாடகாவுடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு!

Published On:

| By Mathi

Who is Doing Solo Performance? TVK's Reply to Stalin

காவிரி பிரச்சனைக்காக ஆகஸ்ட் 3-ந் தேதி பெங்களூருவில் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமாருடன் தமிழக முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!

ADVERTISEMENT

நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.!

ADVERTISEMENT

கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!

ADVERTISEMENT

பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை மாண்புமிகு முதல்வர் விஜய் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share