ராமதாஸ் பிறந்தநாள் : ஸ்டாலின், விஜய் வாழ்த்து!

Published On:

| By Kavi

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூலை 25)  தனது 88ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

முதல்வர் விஜய்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

ADVERTISEMENT

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர்  ஸ்டாலின்

ADVERTISEMENT

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

சமூகநீதிக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து, முக்கியக் குரலாக ஒலித்து வந்த தாங்கள் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், தங்களது ஓய்வுக்காலம் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் திகழ்ந்திட விழைகிறேன்.

முன்னதாக தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில்  பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று முதல் அரசியல் துறவறம் செய்கிறேன். இனி அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share