எஸ்பிஐ வங்கி மேலாளரை தாக்கிய விவகாரத்தில் முக அழகிரியின் மகள் கயல்விழி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரியின் மகள் கயல்விழி. இவருக்கு அடையாறில் சொந்தமாக ஒரு கட்டிட வளாகம் உள்ளது.
இதில் எஸ்பிஐ -என்.ஆர்.ஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் லிஃப்ட் பழுதானதால் இதுகுறித்து எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் பராமரிப்பு பணியாளரிடம் சரி செய்யுமாறு தெரிவித்திருக்கிறார்.
ஆனால் சரி செய்யப்படாததால் மேலாளர் ஹர்ஷன் சிங், இந்த புகாரை கயல்விழியிடம் கொண்டு சென்றிருக்கிறார்.
இதனால் கடந்த ஜூலை 20ஆம் தேதி வங்கி கிளைக்கு சென்ற கயல்விழி, வங்கி மேலாளரிடம் பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்துள்ளார் கயல்விழி.
இதையடுத்து அங்கிருந்த ஒருவர் கயல்விழியை சமாதானம் செய்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ அங்கிருந்த சிசிடிவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பிஐ ஆர்.பி.ஓ-II முதன்மை மேலாளர் நமச்சிவாயம் ஜூலை 21ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அடையார் போலீசார் கயல்விழி மீது மிரட்டல் மற்றும் தாக்குதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக தவெக ஆட்சி அமைந்தபோது, தலைமை செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்து கயல்விழி வாழ்த்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
