விடாது துரத்திய தமிழர் ‘சாபம்’.. யார் இந்த தர்மேந்திர பிரதான்?

Published On:

| By Minnambalam Desk

'Tamil Curse' Haunted.. Who is Dharmendra Pradhan?

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தர்மேந்திர பிரதான் (Dharmendra Pradhan).

இதே தர்மேந்திர பிரதான்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் மிக கடுமையாக எதிர்க்கும் ‘புதிய தேசிய கல்விக் கொள்கையை’ திணித்தவர். இதனாலேயே தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை நிறுத்தியவர். இது தொடர்பாக மக்களவையில் திமுகவின் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கேள்வி கேட்ட போது, “தமிழர்களை நாகரிகமற்றவர்கள்” என விமர்சித்து பின் கருத்தை வாபஸ் வாங்கி தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை சம்பாதித்தவர்.அன்று தமிழர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட தர்மேந்திர பிரதான் இன்று ஒட்டுமொத்த நாட்டின் எதிர்ப்புக்கும் உள்ளாகி தமது மத்திய அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்துள்ளார்.

ADVERTISEMENT

2025-ம் ஆண்டு தமிழரை மிக இழிவாக விமர்சித்த போது நமது மின்னம்பலத்தில் ”தர்மேந்திர பிரதான் யார்?” என்கிற செய்திக் கட்டுரை வெளியிட்டோம்.

அந்த கட்டுரையின் இணைப்பு:

ADVERTISEMENT

”நாடி நரம்பெல்லாம் ஆர்.எஸ்.எஸ். ரத்தம்… மோடியின் உஜ்வாலாமேன்… தமிழர்களை இழிவுபடுத்திய, தர்மேந்திர பிரதான் யார்?”

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share