வைஃபை ஆன் செய்தவுடன் இன்று (ஏப்ரல் 11) சென்னையில் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்த காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. Amit Shah-Edappadi sharing secret!
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ஏப்ரல் 10 ஆம் தேதி இரவு சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏப்ரல் 11 ஆம் தேதி காலை கிண்டி சோழா ஹோட்டலில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை தலைவர்களை சந்திப்பதாக இருந்தது. அதன் பின் 12.30க்கு அந்த ஹோட்டலில் உள்ள தஞ்சாவூர் ஹால் அரங்கத்தில் பத்திரிகையாளர்களை மதிய விருந்துடன் சந்திப்பதாக திட்டமிட்டிருந்தார்கள்.
நிகழ்ச்சி நிரலில் மாற்றமாக, அமித் ஷா காலையிலேயே கிளம்பி சாலிகிராமத்தில் இருக்கும் டாக்டர் தமிழிசை அவர்களின் வீடு தேடிச் சென்று, மறைந்த அவரது தந்தையார் குமரி அனந்தன் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின் மயிலாப்பூரில் இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு முற்பகல் சென்றார். Coalition government… How many seats AIADMK Amit Shah-Edappadi sharing secret!

அங்கே ஆலோசனைகளோடு மதிய உணவும் உண்டார். பத்திரிகையாளார் சந்திப்பு மாலைக்கு தள்ளி வைக்கப்பட்டது. காரணம் எடப்பாடி பழனிசாமிதான்.
பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடந்தது. இதற்காக காத்துக் கொண்டிருந்தார் எடப்பாடி. ஆனால், தான் பங்குனி உத்திர பூஜைகளில் இருப்பதாகவும் அதை முடித்துக் கொண்டு மாலைதான் வர இயலும் என தெரிவித்துவிட்டார். பங்குனி உத்திர பூஜைகளை முடித்த எடப்பாடி, அதேநேரம் பாஜக மாநிலத் தலைவராக நயினார் தான் வருவார் என்பதை 4 மணி வரை காத்திருந்து உறுதிப்படுத்திக் கொண்டார்.
4.36 மணிக்கு அமித் ஷாவே தனது வலைத் தளப் பக்கத்தில், ‘தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் தவிர யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை’ என்று அறிவித்தார்.
கட்சி ரீதியாக எந்த பதவியிலும் இல்லாத அமித் ஷா, தமிழ்நாடு மாநில பாஜகவின் உட்கட்சித் தேர்தல் பற்றி அறிவிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், எடப்பாடிக்கு நாங்கள் அண்ணாமலையை மாற்றிவிட்டோம் என்பதை உறுதிப்படுத்தவே இந்த பதிவை இட்டார். அதன் பின்னரே தனது வீட்டில் இருந்து புறப்பட்டார் எடப்பாடி.
அதாவது கடந்த மார்ச் 25 ஆம் தேதி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தபோது, ‘அதிமுக-பாஜக கூட்டணி அமைவதில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. ஆனால், அண்ணாமலை தலைவராக இருக்கும் பட்சத்தில் இரு கட்சிகளுக்கு இடையே இணக்கம் இருக்காது. அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார். மேலும் அண்ணாமலை மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதா பற்றியும் இப்போதைய அதிமுக தலைவர்களை பற்றியும் பேசிய அவதூறுகளை இந்தி சப் டைட்டில்களோடு வீடியோவாக கொடுத்தார். ‘

இந்த நிலையில்தான், முற்பகலில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினால், ‘அண்ணாமலையே பாஜக தலைவராக மீண்டும் தொடர்கிறார்’ என்ற நிலைப்பாட்டை மாலையில் எடுத்துவிட்டால் என்ன செய்வது என சந்தேகப்பட்டிருக்கிறார் எடப்பாடி. Amit Shah-Edappadi sharing secret!
அதனால்தான் மாநில தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து அமித் ஷா அதை உறுதிப்படுத்திய பிறகே அவரை சந்திக்க புறப்பட்டார் எடப்பாடி.
இதன் பிறகு மாலை எடப்பாடியுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த அமித் ஷா,
“உங்கள் அனைவருக்கும் ஒரு மிக முக்கியமான ஒரு நல்ல தகவலை அறிவிக்கவே இந்த நிகழ்வை கூட்டியிருக்கிறோம். இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், அதிமுகவின் தலைவர்களும் ஒன்றாக இணைந்து இந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். அடுத்து வரப்போகிற 2026 சட்டமன்றத் தேர்தலை என் டி ஏ கூட்டணியில் நாங்களும் மற்ற கட்சிகளும் இணைந்து சந்திக்க இருக்கிறோம்.
இந்த கூட்டணி தேசிய அளவில் மோடி அவர்களின் தலைமையிலும் தமிழ்நாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்களின் தலைமையிலும் நடைபெற இருக்கிறது.
1998 ஆம் ஆண்டு முதல் அதிமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி தொடர்ந்து அமைத்து வருகிறது. இது ஒரு இயல்பான கூட்டணி. மறைந்த ஜெயலலிதா அவர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களில் இந்த கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு முறை 39 இடங்களில் போட்டியிட்டு 30 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
வரப்போகிற தேர்தல்ல எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அதிமுகவின் இந்த கூட்டணி மிகப் பெரும்பான்மை வாக்குகளை பற்றி ஆட்சி அமைக்கப் போகிறது. எடப்பாடி அவர்கள் தலைமையில்தான் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். கூட்டணி ஆட்சிதான் அமைப்போம்., எத்தனை அமைச்சர்கள் என்பதெல்லாம் வெற்றிக்குப் பிறகு முடிவு செய்யப்படும்.
அதிமுக இந்த கூட்டணியில் சேர்ப்பதற்கு எந்த நிபந்தனையும் எங்களுக்கு விதிக்கவில்லை. இது ஒரு இயல்பான இயற்கையான கூட்டணி” என்று கூறினார். கூட்டணி ஆட்சிதான் என்பதை அமித் ஷா எடப்பாடி முன்னிலையில் இன்று கூறியபோது எடப்பாடியும் அதை ஆமோதித்தபடியேதான் அமர்ந்திருந்தார். Coalition government… How many seats AIADMK Amit Shah-Edappadi sharing secret!
அப்படியென்றால் இது தொடர்பாக எடப்பாடிக்கும் அமித் ஷாவுக்கும் இடையே பேசி முடிவெடுக்கக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்விக்கு விடை தேடியபோது…
‘கூட்டணிக்கு மாநில அளவில் எடப்பாடிதான் தலைமை என்பதை டெல்லியிலேயே ஏற்றுக் கொண்ட அமித் ஷா, அதை சென்னையிலும் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னர் பாஜக தலைமையிலான கூட்டணி என்று அண்ணாமலை தொடர்ந்து அழுத்தம் திருத்தமாக சொல்லி வந்ததை அமித் ஷா தலைகீழாக மாற்றிவிட்டார்.

அதேநேரம் கூட்டணி ஆட்சி என்பதில் அமித் ஷா தெளிவாக இருக்கிறார். எடப்பாடியும் அதற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார். அதிமுக தலைமையில் கூட்டணி, ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் கிடையாது என்பது உள்ளிட்ட தனது முக்கிய நிபந்தனைகளை அமித் ஷா ஏற்றுக் கொண்ட நிலையில் கூட்டணி ஆட்சி என்பதையும் எடப்பாடி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அதிமுக சட்டமன்றத் தேர்தலில் 150 இடங்களில் போட்டியிடும். மீதி இருக்கும் 84 இடங்களில் பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும். வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அமைச்சரவையில் பாஜக நான்கு அமைச்சர்களை கேட்டுள்ளது. அதற்கு எடப்பாடி தரப்பில் 2 அமைச்சர்கள் பதவி வழங்கப்படுவதாக முதல் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் மனதில் வைத்துதான் கூட்டணி ஆட்சி என்பதை எடப்பாடி முன்னிலையிலேயே குறிப்பிட்டார் அமித் ஷா. மற்றவை தேர்தல் வெற்றிக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். Amit Shah-g secret!
அமித் ஷா சொன்ன கூட்டணி ஆட்சியை, எடப்பாடியும் விரைவில் அறிவிப்பார் என பாஜகவினர் கூறுகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸப்.