அண்ணாமலையை மாற்றியதால் கூட்டணி உறுதியானதா?: அமித்ஷா பதில்!

Published On:

| By Kavi

Is the alliance solidified by changing Annamalai

பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றியதால் அதிமுக பாஜக கூட்டணி உருவானதா என்ற கேள்விக்கு அமித்ஷா பதிலளித்தார். Is the alliance solidified by changing Annamalai

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்று (ஏப்ரல் 11) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், பாஜகவின் மாநில தலைவர் மாற்றப்பட்ட பிறகுதான் அதிமுக என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறதா? 2023ல் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய போது அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துதான் வெளியே போயிருந்தார்கள். இதை பாஜக தலைமை எப்படி பார்க்கிறது என்று கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமித்ஷா, “இதில் கொஞ்சம் கூட உண்மையில்லை. இன்றும் மாநில தலைவராகத்தான் என் அருகில் அண்ணாமலை உங்கள் முன் அமர்ந்திருக்கிறார். நீண்ட உறுதியான வலுவான கூட்டணியை அமைப்பதற்காகத்தான் இந்த தாமதம் ஏற்பட்டது” என்றார்.

ADVERTISEMENT

இதையடுத்து பாஜகவின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்கள் பயன்படுத்தப்படும் என்று ட்வீட் செய்திருந்தீர்கள், அவருக்கு தேசிய அளவில் என்ன பொறுப்பு வழங்கப்படும்… இல்லையென்றால் 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் அவரது பங்கு இருக்குமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ”சில விஷயங்களை கட்சித் தலைமை முடிவு செய்யும். நீங்கள் கட்சியை நடத்த வேண்டாம். நாங்கள் நடத்திக்கொள்கிறோம்” என்று பதிலளித்தார் அமித்ஷா. Is the alliance solidified by changing Annamalai

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share