பெருந்துறையில் ரோடு ஷோ, நலத்திட்ட உதவிகளை வழங்கும் விஜய்

By Pandeeswari Gurusamy

|

Published on 3 Nov 2026, 10:23 AM

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து விமான நிலையம் கிளம்பினார்.

ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்குத் தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடனுதவி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழா இன்று காலை நடைபெறுகிறது. பெருந்துறை நான்கு வழிச்சாலை, காஞ்சிக்கோவில் ரோட்டில் உள்ள ‘ஸ்ரீ லட்சுமி நாராயணா மஹாலில்’ நடைபெறும் இவ்விழாவில், தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு வங்கிக் கடனுதவிகள் மற்றும் ரூ.1,110 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள மகளிர் குழுவினர் அமைத்துள்ள கண்காட்சி அரங்குகளையும் அவர் பார்வையிட உள்ளார்.

ADVERTISEMENT

இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடையும் முதல்வர் விஜய்க்கு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாகக் காரில் ஈரோடு புறப்பட்டுச் செல்கிறார்.

விஜயமங்கலத்தைக் கடந்த பிறகு, சிப்காட் பகுதி வழியாக ஈரோடு சாலைக்கு வரும் முதல்வர், பெருந்துறை நகர்ப்பகுதி வழியாக விழா நடைபெறும் இடத்திற்குச் செல்கிறார். அரசு விழா நடைபெறும் காஞ்சிக்கோவில் சாலைப் பிரிவு வரை, சுமார் 7 இடங்களில் வாகனத்தில் இருந்து இறங்கி மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா முடிந்த பின்னர், அவர் மீண்டும் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.

ADVERTISEMENT

ட்ரோன்கள் பறக்கத் தடை:

முதல்வர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் மற்றும் அவர் பயணிக்கும் வழித்தடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முதல்வர் பயணிக்கும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை விமான நிலைய சிக்னல், சின்னியம்பாளையம், கணியூர் டோல்கேட், கருமத்தம்பட்டி நான்கு ரோடு, தெக்கலூர் பிரிவு, நீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் முதல்வரைப் பார்வையிடுவதற்காக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதேபோல், கோவை விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை சந்திப்பு வரையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈரோடு செல்லும் வழித்தடம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் கோவை விமான நிலைய ஸ்பெஷல் கேட்டிற்கு வந்துள்ளது.

முதல்வர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈரோடு செல்லும் வழித்தடம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் விஜய் தற்போது சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து விமான நிலையம் கிளம்பி உள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel