வைஃபை ஆன் செய்ததும், “வாங்கனா வணக்கம்னா வாத்தி ரைடுனா”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. எந்த ஏரியாவுல ‘ரைடு’?
ஏதோ ஒரு இடத்துல ரெண்டு இடத்துல இல்லை போல.. ஒட்டுமொத்தமா சப்சேடா ரைடு அடிக்க போறாங்களாம் ப்ரோ..
சிஎம் விஜய் தலைமையில இன்னைக்கு முதல் அமைச்சரவை கூட்டம் நடக்க போகுது.. இந்த கூட்டத்துல தொழில்துறை சார்ந்த விஷயங்கள், தேர்தல் வாக்குறுதிகள் பத்தி டிஸ்கஷன் நடக்குதாம்..
அதோட டாஸ்மாக் (TASMAC) விவகாரத்துல இன்னைக்கு அமைச்சரவை கூட்டத்தில சீரியசா சில விஷயங்களை முடிவு எடுக்கப் போகுதாம்.. இதுக்கு முன்னோட்டமாதான் கடந்த சில நாட்களாக டாஸ்மாக் பத்தி சிஎம் விஜய் அடுத்தடுத்து மீட்டிங் நடத்தினாராம்..
நம்ம மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில்தான் முதன் முதலாக டாஸ்மாக் விவகாரத்தை பத்தி பேசியிருந்தோம் ஞாபம் இருக்காங்க ப்ரோ? “டாஸ்மாக்’ சாம்ராஜ்யம்.. அறிமுகமாகும் ‘கர்நாடகா’ ஸ்டைல்.. விஜய் அரசின் அதகள ‘ஸ்கெட்ச்’!”ங்கிற தலைப்பிலதான் நாம பதிவு செஞ்சிருந்தோம்..
கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டுலேயும் மதுபான விற்பனையை செயல்படுத்த போறாங்கன்னு சொல்லி இருந்தோம்.. அதைப்பத்தியும் இன்னைக்கு அமைச்சரவை கூட்டத்துல பேச போறாங்களாம்..
சிஎம் விஜய்க்கு நெருக்கமான சர்க்கிளில் இதை பத்தி கேட்டப்ப, “அரசாங்கமே சாராயம் விக்கனுமா.. பட்டம் படிச்சவங்க சாராயம் விக்கனுமா? சாராயம் விக்குறதுக்கு அமைச்சரா?ன்னு தீவிரமா பிரசாரம் செஞ்சோம்.. அதனால ஆட்சி அமைஞ்சதுல இருந்தே டாஸ்மாக் பஞ்சாயத்தை எப்படி சால்வ் பண்றதுன்னு ரொம்பவே சீரியசா டிஸ்கஷன் செஞ்சாங்க..
டாஸ்மாக் பார்களுக்கு கொடுத்த டெண்டர் இந்த மாசத்தோட முடிய போகுது.. புது டெண்டர் விடனும்.. அதுக்குள்ள அரசு டாஸ்மாக் விவகாரத்தில ‘கொள்கை’ முடிவுகளாக சிலவற்றை எடுக்க போறாங்க..
அதாவது டாஸ்மாக் நிறுவனம்.. மதுபானங்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்கிற டாஸ்மாக் நிறுவனம் அப்படியே இருக்கும்.. அது அதனோட வேலையை செஞ்சுகிட்டுதான் இருக்கும்..
ஆனா டாஸ்மாக் நிறுவனம் நடத்துற சில்லறை விற்பனை கடைகளை குறைக்கிறது அல்லது மூடுறது… அதாவது அரசாங்கம் இனி சாராயம் விக்காது..
அதுக்கு பதிலாக பெரும் எண்ணிக்கையில தனியார்களுக்கு டாஸ்மாக் சில்லறை விற்பனை மற்றும் பார்களுக்கு லைசென்ஸ் கொடுக்கலாம்னு யோசிக்கிறாங்க..
ஏன்னா இந்த தனியார் விற்பனை கடைகளில்ல என்ன எம்.ஆர்.பி.யோ அதே ரேட்தான் விற்கனும்னு கண்டிஷன் போடுவாங்க.. அதோட பார்கள் சுகாதாரமா இருக்கனும்.. அதிக விலைக்கு விற்க கூடாதுன்னு கண்டிஷன் போடுவாங்க.. அப்ப ‘பாட்டிலுக்கு 10 ரூ, 20 ரூபா பிரச்சனையும் வராது.. பார்களை பற்றிய புகாரும் வராது..ன்னு நினைக்கிறாங்க. எலக்ஷன்ல சொன்னபடி டாஸ்மாக் கடைகளை மூடுனமாதிரியும் இருக்கு.. அரசாங்கத்துக்கான வருமானம் குறையாம அதிகமாக்குனமாதிரியும் இருக்கு.. இதைப்பத்தியும் இன்னைக்கு கேபினட் மீட்டிங்குல டிஸ்கஷன் செய்யறாங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
