டிஜிட்டல் திண்ணை: ’டாஸ்மாக்’ சாம்ராஜ்யம்.. அறிமுகமாகும் ‘கர்நாடகா’ ஸ்டைல்.. விஜய் அரசின் அதகள ‘ஸ்கெட்ச்’!

Published On:

| By Mathi

Digita Thinnai TASMAC

வைஃபை ஆன் செய்ததும், “கண்ணதாசன் காரைக்குடி.. பேரை சொல்லி..” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. பாட்டு ரொம்ப வித்தியாசமா இருக்கே..

ADVERTISEMENT

அப்படியாங்க ப்ரோ.. நாம ஷேர் பண்ண போற தகவலும் கூட அந்த ‘ரகம்’தான்.. டாஸ்மாக்அமைச்சர் விக்னேஷ் கொடுத்த பேட்டி சோசியல் மீடியாவுல டிரெண்டிங்காகிட்டு இருக்கு..

”மதுவிலக்கு அப்படிங்கிறது சாத்தியம் இல்லை.. கள்ள சாராயம் வந்துடும்.. அதே மாதிரி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்குறது கூட கோர்ட் உத்தரவுப்படிதான்..”ன்னு நிறையவே விளக்கம் கொடுத்திருக்காரு..

ADVERTISEMENT

அதனால எலக்‌ஷன் அப்ப ”பத்து ரூபாய் பாட்டிலுன்னு பாடுனது எல்லாம் பொய்யா கோபால்”னு கிண்டலடிச்சுகிட்டும் இருக்காங்க..

அதோட, “டாஸ்மாக் பார்கள், கிளப்புகளுக்கான லைசென்ஸ்” பத்தியும் அமைச்சர் விக்னேஷ் பேசியிருந்தாரு..

ADVERTISEMENT

சரி டாஸ்மாக்ல என்னதான் நடக்குது? என்ன நடக்க போகுது?ன்னு விசாரிச்சப்ப, “விஜய் ஆட்சி அமைஞ்சதுல இருந்தே டாஸ்மாக் விற்பனையில ஆதவ் அர்ஜூனா பேருதான் அடிபடுது.. உண்மையில அவரு துறை இது இல்லைதான்..

ஆனா டாஸ்மாக் அதாவது மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சராக விக்னேஷை நியமிச்சதுல இருந்து மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனா இந்த துறையில ‘கூடுதலா’ கவனம் செலுத்துறார்”ன்னு சொல்றாங்க..

அப்படி என்ன மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனாவுக்கு இன்ட்ரஸ்ட்ன்னு விசாரிச்சப்ப ப்ளாஷ் பேக்கோட சில விஷயங்களை சொல்றாங்க..

அதாவது, “2021-ல் திமுக ஜெயிக்க நானும் முக்கிய காரணம்.. பிரஷாந்த் கிஷோரை திமுகவுக்கு கூட்டிகிட்டு வந்ததே நான்தான்.. சோசியல் மீடியா மூலமா வோட்டர்ஸை இன்ப்ளூயன்ஸ் செய்ய வைக்க முடியும்னு செஞ்சு காண்பிச்சோம்”னு ஆதவ் அர்ஜூனா ஏற்கனவே பேட்டிகள் எல்லாம் கொடுத்திருக்கிறாரு.

ஆதவ் மச்சான் சார்லஸும், திமுகவுக்கு நாங்க ரூ200 கோடி தேர்தல் நிதி கொடுத்திருந்தோம்னு சொல்லி இருந்தாரு..

2021-ல் திமுக கவர்மெண்ட் வந்தப்ப ஆதவ் அர்ஜூனா 2 விஷயத்துல இன்ட்ரஸ்ட் காண்பிச்சாரு…

அதுல ஒன்னு, சத்துணவுக்கான அரிசி, பருப்பு, முட்டை சப்ளை ஒப்பந்தத்தை நாமக்கல் கிறிஸ்டி நிறுவனத்துக்கு பதிலா தான் கிட்ட தரனும்னு எதிர்பார்த்தாரு.. ஆனா இந்த டிபார்ட்மெண்ட்ல அனுபவம் பத்தாதுன்னு சொல்லி போன திமுக கவர்மெண்ட், ஆதவ்-க்கு கொடுக்கலை..

ரெண்டாவது, கர்நாடகா ஸ்டைலில் தமிழ்நாட்டுல மதுபானங்களை தனியார் விற்பனை செய்கிற ப்ராஜெக்ட்.. கர்நாடகா மாதிரி ஒரு சிஸ்டத்தை கொண்டுவரலாம்னு ஆதவ் அப்ப நினைச்சாரு.. ஆனாலும் திமுக கவர்மெண்ட்டுல அதுவும் ஒர்க் அவுட் ஆகாம போச்சு..

இப்ப விஜய் கவர்மெண்ட் அமைஞ்சுருக்குகிற நிலையில, ‘கர்நாடகா ஸ்டைல் தனியார் விற்பனை இங்கேயும் அறிமுகமாக சான்ஸ் இருக்கு..

அமைச்சர் விக்னேஷும்கூட , ”கிளப் லைசைன்ஸ்களில் மாற்றம் கொண்டுவர ஆலோசிக்கிறோம்”னு அழுத்தமா முக்கியத்துவம் கொடுத்து சொல்லி இருக்கிறதை எல்லாம் பார்த்தா கைவிடப்பட்ட ஆதவ்வின் அந்த ப்ராஜக்ட் ஒர்க் அவுட் ஆகிடும் போல தெரியுதுங்க ப்ரோ” என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share